மண்டைல ஒரு சரக்கும் இல்ல! நம்பி வந்தவரை இப்படி நடுத்தெருவுல விடலாமா? கௌதம் மேனனை கிழித்த பிரபலம்

by Rohini |
gautham
X

gautham

Director Gautham Menon: தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் ஒரு இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இயக்குனராக ரசிகர்களை கவர்ந்த இவர் இப்போது ஒரு நடிகராகவும் தன்னை யார் என நிருபித்து வருகிறார். பல படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கைத்தட்டல்களை அசால்ட்டாக தட்டி சென்று விடுகிறார். இவருக்கு என தமிழ் சினிமாவில் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றனர்.

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ஜோஷ்வா. ஐசரி கணேஷ் தயாரிப்பில் வருண் நடிப்பில் வெளியான இந்தப் படம் தோல்வியை தழுவியது. இதை பற்றி வலைப்பேச்சு பிஸ்மி பல காரசாரமான தகவல்களை கூறினார். அதாவது இது நாள் வரை கௌதம் மேனன் மற்றவர்களின் சரக்கை வைத்தே வண்டியை ஓட்டி கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: நயன்தாரா மேல இவ்வளவு லவ்வா?!.. பிரதீப் படத்துக்கு வாங்கிய அட்வான்ஸில் விக்கி செய்த வேலை!..

இப்பொழுதுதான் தனது சொந்தச் சரக்கை வெளியிட்டிருக்கிறார். அதுவும் எப்படிப்பட்டது என அனைவருக்கும் தெரிந்திருக்கும் என பிஸ்மி கூறினார். அதாவது கௌதம் மேனன் பெரிய நடிகர்களின் நிழலிலேயே தஞ்சம் அடைந்து பெயரை எடுத்தவராம். ஜோஷ்வா படத்தின் மூலம்தான் அவரின் குட்டு என தெரிந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் ஜோஷ்வா படத்தின் பின்னனியிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறதாம்.

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை எடுத்துவிட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்த கௌதம்மேனனுக்கு பணம் கொடுத்து உதவி செய்தவர் ஐசரி கணேஷ். அதனால் இதற்கு பதிலாக தன் கம்பெனிக்கு மூன்று படங்களை எடுத்து தருமாறு கேட்டிருந்தாராம் ஐசரி. அதன் அடிப்படையிலேயே வெந்து தணிந்தது காடு படம் உருவாகியிருக்கிறது. அடுத்ததாக வெளியான படம்தான் ஜோஷ்வா.

இதையும் படிங்க: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க போவது இந்த முன்னணி நடிகரின் மகனா? இது வேற ரூட்டால இருக்கு!..

இந்தப் படத்தின் மூலம் எப்படியாவது தன் அக்கா மகனை ஹீரோவாக நடிக்க வைத்து ஜெயித்து விட வேண்டும் என்று எண்ணியே வருணை நடிக்க வைத்திருக்கிறார் ஐசரி. ஆனால் கௌதம் செஞ்ச வேலையால் வருணின் வாழ்க்கையே போய்விட்டது என பிஸ்மி கூறினார். ஒரு நன்றிக்கடன் பட்டவராக கௌதம் மேனன் இருந்து நல்ல கதையை அல்லவா கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ ஏதோ கதைகளை எடுத்து சொதப்பி வைத்திருக்கிறார் என பிஸ்மி கூறினார்.

Next Story