வலைப்பேச்சு செஞ்சது ஊடக தர்மம் இல்ல... சரமாரியாக கேள்வி கேட்ட பிரபலம்

சமீபத்தில் நடிகர் யோகிபாபுவை வலைப்பேச்சு குழுவினர் விமர்சனம் செய்து வெளியிட்டு இருந்த வீடியோ வைரலானது. சினிமா செய்தியாளர் டிவிஎஸ்.சோமசுந்தரம் இதுபற்றி என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.

யோகிபாபு ஒரு வீடியோவுல இந்த மாதிரி பணம் கேட்டாங்க. தப்பு தப்பா பேசுனாங்க. ஏன் இப்படி பேசறீங்கன்னு கேட்டப்ப நீங்க கவனிக்கிறதே இல்லன்னு சொன்னாங்க. நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற சூழல்ல நான் எதுக்குப் பணம் தரணும்னு கேட்டாரு. இது சம்பந்தமா வலைப்பேச்சு தளத்தில் விளக்கம் கொடுத்தாங்க. அந்தனன் எனக்கு நண்பர்.

அவர் யோகிபாபு நம்மைத் தான் சொல்லி இருக்கிறார்னு அவர் அந்த வலைத்தளத்துல சொல்றாரு. ஆனால் இதை சில பல வாரங்களுக்கு முன்னர் யோகிபாபு சொன்னாருன்னும் சொல்றாரு.

அதுல தான் என்னோட கேள்வியே ஆரம்பிக்குது. சினிமா தகவல்களை எல்லாம் உடனுக்குடன் சொல்றவரு அவர். அப்படி இருக்கப்போ இந்த விஷயத்தை மட்டும் ஏன் கெடப்புல போட்டாங்க.

mandela

mandela

யோகிபாபு அப்போ பேசுனதை யாரும் கவனிக்கல. இப்போ வலைப்பேச்சுல அவரைப் பத்தி பேசுனது .வைரலாகி இவங்களை டேக் பண்ணி பல பேர் சமூக வலைதளத்துல விமர்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க. திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி ஆயிடுச்சுன்னு சொல்வாங்க. அப்படிங்கற சந்தேகப்பார்வை, ஒரு யூகம் வரத்தானே செய்யுது. அதான் என்னோட முதல் பார்வை. முதல் கேள்வி.

அடுத்து பிஸ்மி சொல்றாங்க. டோன்ட் டச் மேட்டர் தான் அது. பல ஆண்டுகளுக்கு முன்னால ஒரு ஹீரோவின் கையை யோகிபாபு தொட்டார். அப்போ அவர் 'டோன்ட் டச்'சுன்னு சொன்னார். அவரு அஜீத். அதை சொன்னதே யோகிபாபு தான். ஆனா பத்திரிகை தர்மத்தால சொல்லலன்னு சொல்றாரு. ஆனா இப்போ சொன்னது மிக விரோதமானது. இது நடந்துச்சா இல்லையான்னு தெரியாது.

ஆனா இது ஒரு வன்கொடுமை. ஆனா அது நடந்துருந்தா அஜீத்தைக் கண்டிக்கிறது தான் ஊடக தர்மம். ஆனா யோகிபாபுவைத் தான் முன்னிலைப்படுத்துறாங்க. இதை எங்களுக்கு சொன்னதே யோகிபாபு தான்னு சொல்றாங்க. அது தான் உண்மையான ஊடக தர்மம். அதை சொல்லவே கூடாது. இது எனது 2வது கேள்வி.

Also read: மீண்டும் அந்த இயக்குனரா?.. அஜித் ஃபேன்ஸ் அப்செட் ஆக போறாங்க!…

அதே நேரம் அதே வீடியோவில் அஜீத் கூட ஒரு படம் நடிச்சாரு. அதுக்கு அடுத்த படத்துல யோகிபாபுவுக்கு வாய்ப்பு இல்ல. அந்தக் கோபத்துல அவர் சொல்லி இருப்பாரு போல. ஆனா அஜீத் அப்படிப்பட்டவர் அல்லன்னு சொல்றாங்க. அஜீத்தைப் பற்றித் தான் ஊருக்கே தெரியுமே. இது எனது 3வது கேள்வி. இதுல இன்னொருத்தர் மண்டேலா படத்தை நாம எவ்வளவு பாராட்டினோம்னு சொல்றாரு.

இந்த ரெண்டும் எதிரெதிர் விஷயம் தானே. அப்படின்னா அந்தக் குழுவே எப்படி தடுமாறி இருக்கு என்பதைப் பார்க்க முடிகிறது. இன்னொன்னு என்னன்னா வலைப்பேச்சு பெரிய தேசப்பற்றுடையதாக இருக்கும் போல. யோகிபாபு வாங்குறது 25 லட்சம் சம்பளம். அதுல 5 லட்சத்துக்குத் தான் கணக்கே காட்டறாரு. பாக்கி எல்லாம் கருப்பு பணம்னு இன்கம் டாக்ஸ்சுக்கு தகவல் கொடுக்குற மாதிரி சொல்றாங்க.

ஆனா உண்மையிலேயே தேசப்பற்று இருந்தா திரைத்துறையில இருக்குறாங்கன்னா மற்றவங்களை ஏன் சொல்லலை? இதுல வேற ஊடக தர்மம் பேசுறாங்க. அதாவது வலைப்பேச்சைப் பொருத்தவரை எனது பார்வை எங்களை யாரும் விமர்சித்துப் பேசுனா நாங்க பதிலுக்கு எந்த அளவுக்கும் இறங்குவோம்னு சொல்ற மாதிரி தான் இருக்கு. இது மிகத் தவறான விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகளை மேலும் அறிய கீழ்க்கண்ட வீடியோ லிங்கை சொடுக்குங்கள்.

https://www.youtube.com/watch?v=5UhRDnusJQo

Related Articles
Next Story
Share it