வாலிக்கு பாடல் கொடுக்க வேண்டாம் கண்டித்த எம்.ஜி.ஆர்... ஆனால் அவரையே கரைத்த வாலியின் சூப்பர் டெக்னிக்...

by Akhilan |
வாலி-எம்.ஜி.ஆர்
X

வாலி-எம்.ஜி.ஆர்

70களின் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் முக்கிய இடம் எம்.ஜி.ஆருக்கும், அவரின் ஆஸ்தான கவிஞர் வாலிக்கும் உண்டு. இருவருக்கும் செல்ல சண்டைகள் நடந்து கொண்டே தான் இருக்கும். அப்படி ஒரு படத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வாலிக்கு பெயர் சூட்டிய நண்பர்:

அந்தக் காலகட்டத்தில், ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தவர் ஓவியர் மாலி. அவரை போலவே தானும் ஓவியராக வேண்டும் என ஆசைப்பட்டதால், அவருடைய பள்ளித் தோழன் பாபு என்பவர், மாலியைப் போல நீயும் வரவேண்டும் எனக் கூறி இவருக்கு வாலி என்னும் பெயரைச் சூட்டியிருக்கிறார்.

வாலி

வாலி

வாலி ஏறத்தாழ 15,000 திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகிய படங்களிலும் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். வாலிக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்தது. அவ்வப்போது ஒருவரை ஒருவர் சீண்டிக்கொள்வது நடக்கும்.

எம்.ஜி.ஆர் மற்றும் வாலி நட்பு:

ஒருமுறை எம்.ஜி.ஆரின் நெருக்கமானவர்கள் நாமெல்லாம் நாத்தீகம் பேசுகிறோம். ஆனால் இந்த வாலி பட்டையை போட்டு இருக்கிறார். அதை எடுக்க சொல்லுங்கள் எனக் கூறினார்கள். எம்.ஜி.ஆரும் இதுகுறித்து வாலியிடம் பேசியிருக்கிறார்.

வாலி-எம்.ஜி.ஆர்

வாலி-எம்.ஜி.ஆர்

அதற்கு வாலி முடியவே முடியாது. நான் இப்படி தான் இருப்பேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார். எம்.ஜி.ஆரும் சரியென விட்டுவிட்டார். ஆனால் இதை காரணமாக வைத்தே உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வாலிக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருடன் சண்டையிட்ட வாலி:

இதையறிந்த வாலி எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு வேண்டும் எனக் கேட்டார். ஆனால் எம்.ஜி.ஆர் மறுத்துவிட்டார். இருந்தும் விடாப்பிடியாக இருந்த வாலி என் பெயருடன் தான் உங்கள் படம் வரும் என திட்டவட்டமாக கூறினார். என்னிடமே சவால் விடுகிறாயா? என எம்.ஜி.ஆர் கேட்க ஆமாம் என வைத்துக்கொள்ளுங்கள்.

எம்.ஜி.ஆர்

உலகம் சுற்றும் வாலிபன்

கண்டிப்பாக என் பெயர் இல்லாமல் இந்த படம் வெளிவராது என்றார் வாலி. கடுப்பான எம்.ஜி.ஆர் என்ன உனக்கு அவ்வளோ நம்பிக்கை என கேட்க படத்தின் பெயரில் என் பெயரும் இருப்பதை மறந்து விட்டீர்களா? என்றார். அப்போது தான் உணர்ந்த எம்.ஜி.ஆர் சிரித்தே விட்டாராம். இதை தொடர்ந்து உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் மூன்று பாடல்களை வாலி எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story