வாலியை கோபப்படுத்திய ரஜினியின் பேச்சு!.. அவர் கொடுத்த பதிலடி தெரியுமா?...
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இவர் எழுதிய பல பாடல்களை ரசிகர்கள் கண்ணதாசன் எழுதியது என நினைத்த காலம் அது. எம்.ஜி.ஆருக்கு காதல் பாடல்கள், சோக பாடல்கள் மற்றும் தத்துவ பாடல்கள் என பல வகையான பாடல்களை வாலி எழுதியுள்ளார். அதோடு, எம்.ஜி.ஆர் தன்னை பிரச்சாரப்படுத்தி பாடிய பாடல்கள அனைத்தையும் எழுதியதும் கவிஞர் வாலிதான்.
அதேபோல், ரஜினிக்கு கவிஞர் வைரமுத்து பல பாடல்களை எழுதினார். அதாவது எம்.ஜி.ஆர் தன்னை பற்றி கூறும்படியான பல பாடல்கலை வாலி எழுதியதை போல், ரஜினியை பாராட்டியும், வாழ்த்தியும், அவரை பில்டப் செய்தும் கவிஞர் வைரமுத்து பல பாடல்களை எழுதியுள்ளார். ரஜினியின் பல படங்களில் அவரை பில்டப் செய்து எடுக்கப்பட்ட ஓப்பனிங் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார்.
இந்நிலையில், எந்திரன் திரைப்பட விழாவில் பேசிய ரஜினி ‘எம்.ஜி.ஆருக்கு வாலி போல் எனக்கு வைரமுத்து அமைந்துள்ளார்’ என பேசினார். அதன்பின் சில நாட்கள் கழித்து அவரின் மகள் சவுந்தர்யா திருமண பத்திரிக்கையை கொடுக்க வாலி வீட்டுக்கு சென்றார்.
அப்போது அவரிடம் வாலி ‘எந்திரன் விழாவில் நீ பேசியதை கேட்டேன். நான் எம்.ஜி.ஆருக்கு எழுதிய சில பாடல்களை சொல்கிறேன். நான் செத்து பிழைச்சவன்டா, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால். இந்த பாட்டெல்லாம் திரையில் எம்.ஜி.ஆர் மட்டுமே பாடமுடியும். அதேபோல், திரையில் நீ மட்டுமே பாடுகிற மாதிரி வைரமுத்து உனக்கு என்ன பாட்டு எழுதி இருக்கார். ஒன்னு சொல்லு பாப்போம்’ என கிடுக்குப்பிடி போட்டாராம்.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் ரஜினி சிரிக்க ‘நீ எம்.ஜி.ஆராக மாறு. ஆனால், வைரமுத்துவை வாலி ஆக்காதே’ என பஞ்ச் சொன்னாராம் வாலி.
இது பற்றி உங்கள் கருத்து என்ன என பதிவிடுங்கள் மக்களே!...
இதையும் படிங்க: “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா”… இந்த கிளாசிக் காமெடி எப்படி உருவாச்சி தெரியுமா?? கேட்டா அசந்திடுவீங்க..