Categories: Cinema History Cinema News latest news

இந்த விஷயம் பெருசா யாருக்கும் தெரியாது.. இளையராஜா பற்றி வாலி சொன்ன சீக்ரெட்!..

சினிமா துறையில் இப்போது உள்ள அளவிற்கு இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் 1980 களில் கிடையாது. அப்போதெல்லாம் மிக குறைவாகவே பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் இருந்தனர். அப்போதிருந்த கவிஞர்களில் கண்ணதாசனுக்கு பிறகு முக்கியமான கவிஞராக இருந்தவர் வாலி.

எம்.ஜி.ஆர் பட காலக்கட்டம் முதலே வாலி பாடல் வரிகள் எழுதி வந்தார். ஆனால் அவர் இளையராஜாவுடன் இணைந்துதான் அதிக பாடல் வரிகளை எழுதியுள்ளார். இளையராஜா இசையமைத்த 3000க்கும் அதிகமான பாடல்களுக்கு வாலி இசையமைத்துள்ளார்.

இவர்கள் காம்போவில் வெளியான பாடல்களில் முக்கால்வாசிக்கும் அதிகமான பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. அதன் பிறகு சில காரணங்களால் இவர்கள் இருவரும் சிறிது காலம் பிரிந்து இருந்தனர்.

இளையராஜாவிற்கு இசையே தெரியாதா?

ஒரு பேட்டியில் இளையராஜாவிடம் நீங்கள் வியக்கும் விஷயம் என்ன? என வாலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு வாலி சொன்ன பதில் அனைவரையும் வியக்க வைத்தது. இளையராஜா சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அரைகுறையாகதான் இசையை கற்றிருந்தார். அவருக்கு வயலின் வாசிக்க தெரியாது.

சினிமாவிற்கு வந்தபோது அதில் வயலினின் தேவை இருப்பதை பார்த்து அவரும் வயலின் வாசிக்க கற்றுக்கொண்டார். அதே போல அவருக்கு சரியாக கருநாடக இசை தெரியாது. சினிமாவிற்கு வந்த பிறகுதான் அவர் கருநாடக இசையையே கற்றுக்கொண்டார்.

அதன் பிறகு பல பாடல்களுக்கு அவர் போட்ட இசை சங்கீத வித்துவான்களையே மிஞ்சி இருந்தது. ஒரு மனிதன் இவ்வளவு குறைந்த காலத்தில் இசையை கற்று அதில் இவ்வளவு பெரிதாக வர முடியுமா? என அப்போது இளையராஜாவை பார்த்து வியப்பாக இருந்தது என்கிறார் வாலி.

இதையும் படிங்க: தமிழ் நடிகையை கேவலப்படுத்திய பாலிவுட்!. – மானத்தை காப்பாற்றிய ஹீரோ… இப்படியெல்லாம் நடந்துச்சா?..

Published by
Rajkumar