Connect with us
Vaali, Mgr

Cinema History

எம்ஜிஆருக்குத் தெரியாமல் கல்யாணம் செய்த வாலி… அப்புறம் சமாதானம் செய்தது எப்படி தெரியுமா?

1965ல் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் எங்க வீட்டுப்பிள்ளை. அந்தப் படத்தில் நான் ஆணையிட்டால் பாடலை எழுதியவர் வாலி. இந்தப் பாடல் மக்களால் ரொம்பவே கொண்டாடப்பட்டது. இந்தப் பாடலைப் பாராட்டி கவிஞர் வாலிக்கு அறிஞர் அண்ணா உள்பட நாடெங்கும் உள்ள ரசிகர்கள் பாராட்டி கடிதம் எழுதினர்.

அதே படத்தில் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே என்ற பாடலையும் வாலி தான் எழுதினார். அந்தப் பாடலைப் பாராட்டி பெண் ரசிகை ஒருவர் வாலிக்குக் கடிதம் எழுதினார். பின்னர் வாலி எழுதிய லவ் லட்டர் என்ற நாடகத்தில் அவரும் நடித்தார். அப்போது நடிகைகள் பலரும் நாடகங்களில் நடிப்பது வழக்கம்.

அந்த வகையில் வாலியின் ‘லவ் லட்டர்’ நாடகத்தில் நடிக்க ஏவிஎம்.ராஜன் உள்பட பலரும் வந்திருந்தனர். வாலி திடீர்னு நான் நாடகத்தை நிறுத்தப் போறேன்னு சொல்கிறார். என்ன இப்படி சொல்றீங்க? நாங்க நாடகத்துக்காக சினிமாவில் நடிக்கறதை எல்லாம் விட்டு விட்டு வந்துருக்கோம் என்றார். இல்ல இந்த நாடகத்துல ஹீரோயினா நடிக்கிற நடிகைக்கு ஒரு பிராப்ளம்.

அவங்களுக்குக் கல்யாணம் ஆகப்போகுதுன்னு சொல்றார். என்ன பிராப்ளம்? யாரு கல்யாணம் முடிக்கப் போறான்னு அவங்கக் கேட்குறாங்க. வாலி சொல்றாரு. நான் தான் அந்தப் பொண்ணைக் கல்யாணம் முடிக்கப் போறேன். அதனால நான் நாடகத்தை நிறுத்தப் போறேன்னு சொல்றார்.

வாலி கல்யாணத்தை யாருக்கிட்டேயும் சொல்லாம சிம்பிளா நடத்த முடிவு செய்கிறார். பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் திருப்பதியில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தை புக்கிங் செய்துள்ளார் வாலி. ஏப்ரல் 7 அன்று திருமண நாளும் முடிவானது. திருமணமும் இனிதே நடந்து முடிந்தது.

EVP

EVP

இந்தத் திருமணம் நடப்பதற்கு 10 நாள்களுக்கு முன்னர் தான் வாலியை சந்தித்த எம்ஜிஆர், ‘ஏன் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க… உங்க கல்யாணத்தை நானே முன்ன நின்னு நடத்தி வைக்கிறேன்’னு கேட்டுள்ளார். அதற்கு வாலி ‘அண்ணே, உங்ககிட்ட சொல்லாமலா நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்’னு சொன்னாராம்.

இதையும் படிங்க… படுக்கையில் ஷாலினி!. கையை பிடித்தபடி அஜித்!.. செம ரொமான்ஸ் போங்க!.. வைரல் பிக்!…

ஆனால் எம்ஜிஆரிடம் சொல்லாமல் வாலி கல்யாணம் செய்துள்ளார். அன்று மாலை பேப்பரில் திருப்பதியில் வாலிக்குக் காதல் திருமணம் என்று செய்தி வெளியானது கண்டு எம்ஜிஆர் அதிர்ச்சி அடைந்தாராம்.

நம்மகிட்ட சொல்லாம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. சரி. கல்யாணம் நடந்த விஷயத்தையாவது சொல்லி இருக்கலாமேன்னு வாலி மீது எம்ஜிஆர் கோபமாக இருந்தாராம். வாலியும் போய் எம்ஜிஆரை நேரில் போய் சமாதானப்படுத்தவில்லை.

வாலி இல்லாமல் எம்ஜிஆரின் பட வேலைகள் எல்லாம் நின்று போகிறது. ஆனால் எம்ஜிஆர் அடுத்தப் படவேலைகளில் வாலி இல்லாமலேயே எடுக்க முடிவு செய்தார். ஆனால் விநியோகஸ்தர்கள் வாலி எழுதினால் நல்லாருக்கும்னு கருத்து சொல்லவே படத்தில் வாலியை எழுத வைத்தார். அந்தப் பாடல் தான் ‘எங்கே போய் விடும் காலம்’ என்ற பாடல்.

அந்த சூழல் தான் எம்ஜிஆர், வாலிக்கும் இடையேயும் இருந்தது. ‘உள்ளதைச் சொல்லி நல்லது செயது வருவது வரட்டும் என்றிருப்போம்’ என்ற வரிகளைப் பார்த்ததும் எம்ஜிஆர் சிரிச்சிக்கிட்டே வாங்கிக் கொண்டாராம். இப்படிப் பாடல் மூலமாகவே பதிலை சொல்லி சமாதானப்படுத்தி அசத்தியவர் தான் வாலி.

google news
Continue Reading

More in Cinema History

To Top