Cinema History
எம்.ஜி.ஆர் பாட்டை எழுத முடியாமல் திணறிய வாலி!.. ஒரே நிமிடத்தில் கலைஞர் செய்த வேலை…
தமிழ் திரையுலகில் கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு பெரும் கவிஞராக மதிக்கப்பட்டவர் வாலி. எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி விஜய், அஜித் காலம் வரை பல படங்களின் பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார் வாலி. ஆரம்பக்காலக்கட்டத்தில் நடிகர் எம்.ஜி.ஆருடன் நல்ல நண்பராக இருந்தார் வாலி.
அப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்கு பாடல் வரிகள் எழுதுவது கடினமான விஷயமாக இருந்தது. ஏனெனில் எம்.ஜி.ஆர் அவரது பாடல் வரிகளில் சமூகத்திற்கு ஏற்ப அரசியல் கருத்துக்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார் எம்.ஜி.ஆர்.
இதனால் கண்ணதாசன் கூட எம்.ஜி.ஆருக்கு அதிக பாடல்கள் எழுதியது கிடையாது. வாலி எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பில் இருந்ததால் அவர் எம்.ஜி.ஆருக்காக பாடல் வரிகளை எழுதி கொடுத்து வந்தார். எம்.ஜி.ஆருக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலாக நேரமெடுத்து பாடல் வரிகளை எழுதுவார் வாலி.
கலைஞர் செய்த உதவி:
இந்த நிலையில் எங்கள் தங்கம் திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்கான வாய்ப்பு வாலிக்கு வந்தது. அதில் ஜெயலலிதாவுடன் ஒரு பாடல் இருந்தது. அந்த பாடலுக்கு முதல் வரி நான் அளவோடு ரசிப்பவன் என எழுதிவிட்டார் வாலி. ஆனால் அடுத்த வரி என்ன எழுதுவது என அவருக்கு புரியவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக யோசித்தும் ஒன்றுமே தோன்றவில்லை. இந்த நிலையில்தான் அங்கு கலைஞர் மு கருணாநிதி வந்துள்ளார். வாலி கஷ்டப்படுவதை கண்ட கலைஞர், எம்.எஸ்.வியை அந்த இசையை இசைக்குமாறு கூறினார். பிறகு அடுத்த வரியாக எதையும் அளவின்றி கொடுப்பவன் என வரி எடுத்து கொடுத்தார்.
பாடலின்போது இந்த வரிகளை கேட்ட எம்.ஜி.ஆர் அதற்காக வாலியிடம் வந்து முத்தம் கொடுத்துள்ளார். உடனே வாலி இதற்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் கலைஞருக்குதான் கொடுக்க வேண்டும். அவர்தான் இந்த வரிகளை எழுதினார் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 13 வயசுலயே அம்மாவான ஊர்வசி! இது என்னடா கொடுமை? ரகசியத்தை உடைத்த அம்மணி