மாஸ் காட்டும் அஜித்....3 நிமிட பரபர ஆக்‌ஷன்.. வலிமை மேக்கிங் வீடியோ....

by சிவா |
valimai
X

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ் திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அஜித் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் நடித்து வந்த கார்த்திகேயான் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாகவுள்ளது.

valimai

இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ வெளியாகி சில நிமிடங்களில் லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

Next Story