வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்ட தியேட்டர்காரர்கள்.! வலிமை 1000 தியேட்டர்களில்...

by Manikandan |
வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்ட தியேட்டர்காரர்கள்.! வலிமை 1000 தியேட்டர்களில்...
X

அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் நாளை உலகமெங்கும் கோலாகலமாக திருவிழா போல வெளியாக உள்ளது. அப்படத்தை வரவேற்க ரசிகர்கள் இன்று இரவு தூக்கத்தை தொலைத்து காத்திருக்க உள்ளனர். நள்ளிரவு முதலே ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்திவிடுவர்.

இப்படம் இதுவரை இல்லாத அஜித் திரைப்பட அளவுக்கு அதிக எண்ணிக்கையில் திரையிட பட உள்ளதாம். முதலில் சில திரையரங்குகள் படத்தை அதிக விலை என்பதால் வாங்குவதா வேண்டாமா என யோசித்து வந்துள்ளனர்.

இதையும் படியுங்களேன் - எங்கப்பா அந்த சிங்கப்பூர் மாமா வலிமை ரிவியூ.?! ஏக்கத்தில் ரசிகர்கள்.! பின்னணியில் இதுதான்.!

ஏனென்றால், படம் முழுக்க ஆக்சன் களமாக இருப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முதல் 10 நாட்கள் ரசிகர்கள் வந்து தியேட்டரை நிரப்பி விடுவர். ஆனால், அதன் பிறகு குடும்பங்கள் வந்தால் தான் எங்களுக்கு நீங்கள் சொல்லும் தொகை கட்டுப்படியாகும் என முட்டுகட்டை போட்டுள்ளனர்.

அப்போது நகர பகுதி தியேட்டர் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள உதயநிதி, அந்த தியேட்டர் ஓனர்களுக்கு ஓர் உத்தரவாதம் அளித்துள்ளார். இப்போது வலிமையை நீங்கள் ரிலீஸ் செய்தால் அடுத்தடுத்து, ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம் போன்ற படங்களையும் உங்களுக்கே தருகிறேன் என கூறியுள்ளார்.

அதன் பிறகே தியேட்டர் ஓனர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். தற்போது வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட, மல்டிப்ளக்ஸ் என அனைத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட 1000 திரைகளில் திரையிட பட உள்ளதாம்.

Next Story