#CineBreaking : வலிமை-2 ரெடி. ! கொண்டாட்டத்தின் உச்சியில் அஜித் ரசிகர்கள்.!

by Manikandan |
#CineBreaking : வலிமை-2 ரெடி. ! கொண்டாட்டத்தின் உச்சியில் அஜித் ரசிகர்கள்.!
X

இன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெறது. அந்த விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் வலிமை தியேட்டர் டிக்கெட் புக்கிங், வலிமையை வலிமையுடன் வரவேற்க அஜித் ரசிகர்கள் தயாராவது என வலிமை அதனை விட விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது.

இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் படங்களை இயக்கிய H.வினோத் இயக்கியுள்ளார். அவரின் முதல் இரண்டு படங்களிலும் கதைக்களம் மிக ஆழமாக இருக்கும். உண்மைக்கு மிக அருகில் தனது திரைக்கதையை அமைத்திருப்பார்.

அதே போல, வலிமையையும் எழுத்தில் உருவாகியுள்ளதால் அப்படம் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. இந்த படம் பற்றி தயாரிப்பாளர் போனிகபூர் கூறுகையில், வலிமை 3 மணிநேரத்தில் சொல்லி முடிக்க கூடிய திரைப்படம் அல்ல.

இதையும் படியுங்களேன் - கொஞ்ச நேரத்தில் இணையத்தை கதிகலங்க வைத்த தளபதி.! இன்னும் அப்டியே இருக்கீங்களே விஜய்.!

அப்படி சொல்லவும் முடியாது. அதில் சொல்லப்படாத விஷயங்கள் இன்னும் இருக்கிறது. அது அடுத்து வரும் என்பது போல பதிலளித்து இருந்தார். அதனால், வலிமை 2 திரைப்படம் உருவாகலாம் என கூறப்படுகிறது. அதில் அஜித் நடிப்பாரா , வினோத் இயக்குவாரா என தெரியவில்லை.

அல்லது, வில்லன் கார்த்திகேயா நடித்துள்ள அந்த கதாபாத்திரம் அதனை சுற்றியுள்ள கதைக்களமாக கூட வலிமை 2 இருக்கலாம் என கூறப்படுகிறது.

Next Story