வலிமைக்கு வந்த புத்தம் புது சிக்கல்.! கொதித்தெழுந்ந்த வழக்கறிஞர்கள்.! பகீர் கிளப்பும் பின்னணி.!
கடந்த வாரம் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. விமர்சன ரீதியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் தற்போது வரை எந்த குறையும் வலிமை வைக்கவில்லை. இப்படம் ஆக்சன் கலந்த சென்டிமென்ட் திரைப்படமாக வெளியாகியுள்ளது
இப்படத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களை ஒரு கும்பல் தங்களது சுய லாபத்திற்காக தவறான பாதைக்கு திசை திருப்புகிறது. இதனை ஒரு போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடித்து சரி செய்கிறார் என்பதே கதை.
இதில் வில்லன் குரூப்பில் சில வழக்கறிஞர்கள் இளைஞர்களை தவறானபாதைக்கு திருப்ப முயற்சிக்கும் படி காட்சிகள் இருக்கும். கொலை வேறு ஒருவர் செய்துவிடுவார். அந்த கொலைக்கே வழக்கறிஞர் ஒருவர் தான் பிளான் போட்டு கொடுப்பது போலவும், அதற்கு போலியாக ஒருவரை சரண்டர் ஆக சொல்வது போலவும் காட்சியமைக்க பட்டிருக்கும்.
இதையும் படியுங்களேன் - இப்போ என் ரேஞ்சே வேற.! வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடிச்சி.!
இதனை குறித்து, வழக்கறிஞர் சங்கம் வலிமை படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாக காட்டுகின்றனர் என கூறி அதனை நீக்க சொல்லியும் கூறிவருகின்றனராம். ஏற்கனவே படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது இதுல இதுவேறையா என படக்குழு வருத்தத்தில் இருக்கிறதாம்.
ஆனால், வழக்கறிஞர்களை தவறாக வலிமை படத்தில் மட்டுமல்ல பல தமிழ் திரைப்படங்களில் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் அது இவர்கள் பார்வைக்கு வரவில்லையா என்பதுதான் புரியவில்லை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.