அடேங்கப்பா.! இறந்த பின்பும் வலிமை-யில் தோன்றிய பழம்பெரும் நடிகர்.! நெகிழ்ச்சியூட்டிய படக்குழு.!
அஜித் நடிப்பில் இன்னும் 3 நாளில் வலிமை திரைப்படம் திருவிழா போல ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தை வரவேற்க ரசிகர்கள் வியாழக்கிழமையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ரசிகர்களை மேலும் குஷிபடுத்த தினம் தினம் ப்ரோமோ ரிலீஸ் செய்து படக்குழு இன்னும் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது.
இப்படத்தில் அஜித் உடன் ஹியூமா குரோஷி, கார்த்திகேயா, G.M.குமார், சுமித்ரா, புகழ் என பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் மேலும் ஒருவர் இருக்கிறார். அவர் அஜித்தின் இறந்துபோன அப்பாவாக காண்பிக்கப்படுகிறார்.
இதையும் படியுங்களேன் - எவளோ பெரிய தயாரிப்பாளரா இருந்தாலும் இதுல சிக்கிருவாங்க.! இதுதான் எங்களோட அசுர பலம்.!
அவர் வேறு யாருமல்ல மறைந்த பழம் பெரும் நடிகர் ஜெய்சங்கர். இவர் அஜித்தின் அப்பாவாக போட்டோவில் காண்பிக்கப்படுகிறார். வலிமை அம்மா பாடல் ப்ரோமோ வீடியோவில் இவர் புகைப்படம் கான்பிக்கப்பட்டது.
வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த திரைப்படம் அஜித்தின் கேரியரில் மிக பெரிய ஓப்பனிங் வசூலை குவிக்கும் என இப்போதே தியேட்டர் அதிபர்கள் கூற ஆரம்பித்து விட்டனர். பல இடங்களில் ஷோ விறுவிறுவென முன்பதிவு ஆகிவருகிறது.