Connect with us
valimai

Cinema News

விஜய் பட வசூலை தொட முடியாத வலிமை.. இதுதான் உண்மை நிலவரம்!….

பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13 வெளியாக காத்திருந்த திரைப்படம் அஜித்தின் வலிமை. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் திரைப்படம் என விளம்பரப்படுத்தப்பட்ட  வலிமை கொஞ்சம் ரசிகர்களை ஏமாற்றத்தான் செய்தது

ஆம், ஆக்சன் திரைப்படம் என கூறிவிட்டு, இரண்டாம் பாதியில் முழுக்க செண்டிமெண்ட் காட்சிகளாக வைத்து ரசிகர்களின் பொறுமையை சோதித்து, பின்னர், படத்தில் இருந்து 15 நிமிடத்தை தூக்கியுள்ளனர்.

இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் சர்கார் வசூலை விட அதிகமாக இருந்தது. சர்க்கார்  முதல் நாள் வசூல் தீபாவளிக்கு வெளியாகி 32 கோடி எனவும், வலிமை அதனை முறியடித்தது எனவும் கூறப்பட்டது.

 

படம் ரிலீஸ் ஆகி,  முதல் 3 நாள் 100 கோடி இதுவரை உலகம் முழுவதும் 200 கோடி என நெட்டிசன்கள் அள்ளி தெளித்து வருகின்றனர்.  இந்த வசூல் நிலவரங்கள் உண்மையில்  நிஜம் தானா, இதெல்லாம் தியேட்டர்காரர்களுக்கு தெரியுமா என தெரியவில்லை.

 

தற்போது தான் இந்த வசூல் பற்றிய உண்மை நிலவரம் நம்பத்தகுந்த வட்டாரங்கள் வழியே வெளியாகி உள்ளது. அதாவது படத்தின் பட்ஜெட் சுமார் 115 கோடியாம். அந்த பட்ஜெட்டை தாண்டி சுமார் 25 கோடி தான் மொத்தமான தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்துள்ளதாம்.

valimai

இதையும் படியுங்களேன் – உன் மூஞ்சிய போட்டா யார் தியேட்டருக்கு வருவாங்க.?! விஜய் சேதுபதியை கழுவி ஊற்றிய தயாரிப்பாளர்.!?

 

தமிழ்நாடு தியேட்டர் உரிமம் 58 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால் விநியோகிஸ்தர்களுக்கு லாபமாக 50 கோடி மட்டுமே இதுவரை கிடைத்துலதாம். தமிழகத்தில் இதுநாள் வரை 90 கோடி தான் வலிமை வசூல் செய்துள்ளதாம். வெளிமாநில, வெளிநாட்டு வசூல் நிலவரம் அவர்களுக்கு மட்டுமே தெரியும் போல.

valimai

 

மேலும், 3 நாளில் 100 கோடி வசூல் எல்லாம் உண்மையான தகவல் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல, இந்த தகவலெல்லம் பொய்தான் என அஜித் ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.

விஜய்க்கு நிகராக மார்க்கெட் உள்ள நடிகராக அஜித் இருக்கிறார் என்கிற எண்ணம் அஜித் ரசிகர்கள் கொண்டுள்ளனர். ஆனால், உண்மையில், விஜய் பட வசூலில் முக்கால்வாசிகூட அஜித் படங்கள் சமீப காலமாக வசூலிப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. விஜய் தற்போதைய ரசிகர்கள் எதனை விரும்புகிறார்கள் என்பதை பொறுத்து தனது ரூட்டை மாற்றி வருகிறார்.

ஆனால் அஜித் அதில் அதிக ஈடுபாடு இல்லாமல்,  தனக்கு ஏற்ற கதைக்களங்களை மட்டும் நடித்து வருகிறார் தொடர்ந்து அதனை செய்வதால் அஜித் ரசிகர்களே அதனை கொஞ்சம் வெறுக்க ஆரம்பித்துள்ளனர் என்பதே உண்மை. அஜித் அதனை மாற்றியமைத்தால் தான் வருங்காலத்தில் விஜய்க்கு நிகரான வியாபாரங்களை பெற முடியும் என்பதே உண்மை.

google news
Continue Reading

More in Cinema News

To Top