
Cinema News
போனி மாம்ஸ்க்கு தண்ணி காட்டிய ஹேக்கர்க்ஸ்.! வெளியான வலிமை பிரிண்ட்….
அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்போடு வெளியான திரைப்படம் வலிமை. முதலில் ஜனவரி மாதம் வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டு பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியானது.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் என இரு பெரிய படங்கள் வெளியான பின்பும் தற்போதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வலிமை இன்னும் வலிமையாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்களேன் – விஜயகாந்தை கழட்டி விட்டுட்டு அஜித்தை ஹீரோவாக்கிட்டேன்.! படம் சூப்பர் டூப்பர் ஹிட்.!
இந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ நிறுவனமும், OTT வெளியீட்டு உரிமையையையும் zee5 நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் OTT ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் அதற்குள் சட்டவிரோதமாக ஒரு இணையதளம் வலிமை படத்தின் HD பிரிண்ட் எனப்படும் தெளிவான பிரிண்டை ஆங்கில சப்டைட்டில் உடன் பதிவேற்றிவிட்டது. இது தயாரிப்பு தரப்புக்கு தெரியாமல் நடந்துள்ளது. இந்து படக்குழுவினருக்கு மட்டுமல்லாது, இன்னும் புது படங்களை எடுக்காமல் வலிமையை ஒட்டிக்கொண்டிருக்கும் தியேட்டர்காரகளுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.