சிஸ்டம் சரியில்லையா?!....வலிமை படத்தில் ரஜினிக்கு பதில் சொன்ன அஜித்...

நடிகர் ரஜினி அவர் நடிக்கும் படங்களில் பேசும் வசனங்கள் மட்டுமல்ல!.. பொது இடங்களில் பேசும் வசனங்களும் புகழடையும். அப்படி அவர் பேசிய பிரபலமான வசனம்தான் ‘இங்க சிஸ்டம் சரியில்லை’ என்பது. இந்த வசனம் அப்போதை ஆளும் கட்சி மற்றும் மத்திய அரசை குறிப்பதாகவே இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த வசனம் பல திரைப்படங்களிலும் எதிரொலித்தது.
இந்நிலையில், நடிகர் அஜித் நடிப்பில் நேற்று வெளியான விலைமை படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதாவது, வேலை இல்லாத அஜித்தின் தம்பி குற்றச்செயல்களை செய்யும் வில்லன் கும்பலிடம் இணைந்து விடுகிறார். அவரை பிடித்து கைது செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார் அஜித். அவரை தடுக்க நினைக்கிறார் அவரின் அம்மா.
இதையும் படிங்க: ஒரே நாளில் அண்ணாத்த, 2.O-வை அடிச்சு தூக்கி முதலிடம் பிடித்த வலிமை.! எத்தனை கோடிகள் தெரியுமா.?!
அப்போது பேசும் அஜித் ‘கவர்மெண்ட் சரியில்லை, சிஸ்டம் சரி இல்லை என திட்டுகிறோம். ஆனால் நமக்கென்று ஒரு பிரச்சினை வரும்போது நேர்மையாக இருக்கின்றோமா? சுயநலமாக மாறிவிடுகிறோம். நாம்தான் சிஸ்டம். நாம் சரியாக இருந்தால்தான் சிஸ்டம் சரியாக இருக்கும்’ என ஒரு வசனம் பேசுகிறார்.
இந்த வசனத்தை இயக்குனர் வினோத் எழுதியிருந்தாலும், ரஜினி ரசிகர்கள் என்ன நினைப்பார்கள் என பயப்படாமல் பேசியுள்ளார் அஜித். சில தீவிர ரஜினி ரசிகர்கள் அஜித் ரஜினியை சீண்டுவதாக சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகின்றனர்.