
Cinema News
தொக்கா மாட்டிக்கிச்சு!… வலிமையுடன் மோதும் பீஸ்ட்… வசூல் எகிறுமா இல்லை படுக்குமா?….
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், சிம்பு – தனுஷ் இந்த வரிசையில் விஜய் – அஜித் இடையே போட்டி என்பது பல வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது. சினிமாவிற்கு இந்த ஆரோக்கியமான போட்டி என்பது தேவைதான். அப்போதுதான் ரசிகர்களை கவரும் திரைப்படங்கள் வெளிவரும்.

ajith valimai
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. ஒன்றரை வருடங்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு சமீபத்தில்தான் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இப்படம் துவங்கியது முதலே இப்படம் தொடர்பான எந்த அப்டேட்டையும் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அஜித் ரசிகர்களுக்கு தெரிவிக்கவில்லை. அப்டேட் கேட்டு கேட்டு ஒருகட்டத்தில் அவர்கள் ஓய்ந்தே போனார்கள்.தற்போது இப்படம் வரும் பொங்கலன்று வெளியாகும் என போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

beast
ஒருபக்கம், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பல வருடங்களுக்கு பின் அஜித்தும் – விஜயும் நேரிடையாக மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரு முக்கிய நடிகர்களின் படங்களும் வெளியானால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் என்பதோடு, இரு நடிகர்களின் ரசிகர்களும் படங்களை ஓட வைக்க முயற்சி எடுப்பார்கள் என்பதால் வசூல் ரீதியாகவும் தப்பிக்கக் கூடும் என கணக்குப்போட்டே ஒரே நாளில் 2 படங்களையும் வெளியிட்ட திட்டமிட்டுள்ளனராம்…