யாரு படம் ஓடுனாலும் ஹீரோ அங்க நாங்கதான்.! சூர்யாவுக்கு முன்னாள் கெத்து காட்டும் வலிமை.!
சூர்யா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். படத்திற்கு கமர்சியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு நிலவி வருகிறது. படத்திற்கும் நல்ல கமெண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
சூர்யாவின் கடைசி இரண்டு திரைப்படங்களான சூரரை போற்று, ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், அது OTTயில் வெளியான திரைப்படங்கள் ஆதலால் தியேட்டர்காரர்கள் அதனை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது இப்படத்தின் மூலம் தெள்ள தெளிவாக தெரிந்துவிட்டது.
ஆம், தியேட்டரில் வெளியாகி சூர்யா படம் சூப்பர் ஹிட்டாகி வருஷம் ஓடிவிட்டது. அதனால், தியேட்டர்காரர்கள் இப்படத்தை குறைவான எண்ணிக்கையில் தான் களமிறக்கியுள்ளாராம். சில ஊர்களில் சூர்யா படத்திற்கு ஒரு சில அமைப்பினர் கொடுத்த எதிர்ப்பின் காரணமாக படத்தை திரையிடவும் இல்லை.
இதையும் படியுங்களேன் - உனக்கு 7 நாள் தான் டைம்.! கமல்ஹாசனுக்கே செக் வைத்த ஒரே இயக்குனர் இவர்தானாம்.!
மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் களமிறங்கிய அஜித்தின் வலிமை ஓரளவு தாக்குப்பிடித்து மூன்றாம் வாரம் வரை நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவும் எதற்கும் துணிந்தவன் அதிகமான தியேட்டர்களில் களமிறங்கவில்லையாம். மேலும், முன்பதிவும் அவ்வளவு விசேஷமாக இல்லை என கூறப்படுகிறது.
ஆனால், அஜித்தின் வலிமை திரைப்படம் 3 வாரங்கள் ஆகியும் இன்னும் 340 திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறதாம். இன்று வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 540 திரையரங்குகளில் தான் ரிலீஸாகியுள்ளதாம்.