“அஜித் படத்தை வேணும்ன்னே ஃப்ளாப் ஆக்குறாங்க”… பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு… இதென்ன புது கதையா இருக்கு??
அஜித்தின் “துணிவு” திஎரைப்படமும் விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இத்திரைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
திரையரங்குகளில் புயல் வேகத்தில் டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுப்போயின. பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் பலரும் ஏங்கிவருகின்றனர்.
அஜித் இதற்கு முன்பு நடித்த “வலிமை” திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. குறிப்பாக அதில் இடம்பெற்ற அம்மா சென்டிமென்ட் காட்சிகள் இணையத்தில் டிரோல் செய்யப்பட்டது. பரவலாக “வலிமை” திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே வந்தன.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜி.எம்.சுந்தர், சமீபத்திய பேட்டி ஒன்றில் “வலிமை” திரைப்படம் குறித்து ஒரு முக்கியமான கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
நடிகர் ஜி.எம்.சுந்தர், “புன்னகை மன்னன்”, “சத்யா”, “காதலும் கடந்து போகும்”, “மகாமுனி”, “மண்டேலா”, “சார்பட்டா பரம்பரை”, “வலிமை” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது “துணிவு” திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு பல திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஜி.எம்.சுந்தர் அப்பேட்டியில் பேசியபோது “வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றி பெற்ற திரைப்படம். ஆனால் தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பப்பட்டது.” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: துணிவு படத்தில் இருந்து ஒதுங்கிய போனி கபூர்… சைலன்ட்டாக நுழைந்து வேலையை காட்டிய உதயநிதி..
ஒரு நடிகருக்கு மார்க்கெட் வேல்யூதான் முக்கியம். அதன் மூலம் நல்ல வசூல் ஆகிறது. வலிமை திரைப்படம் என்னை பொறுத்தவரை ஹிட் ஆன திரைப்படம்தான். அதனால்தான் துணிவு படத்திலும் அஜித்-போனி கபூர்-ஹெச் வினோத் ஆகியோர் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்” என அப்பேட்டியில் ஜி.எம்.சுந்தர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.