பல ஏரியாக்களில் நஷ்டம்!..100 கோடியெல்லாம் சும்மாவா?... வலிமை பட வசூல் இதுதான்....
போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கி அஜித் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் இல்லாத எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருந்தது. எங்கு பார்த்தாலும் வலிமை அப்டேட்..வலிமை அப்டேட் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் எதிரொலித்தது.
இதுவரை இல்லாத அளவுக்கு இப்படம் தமிழகத்தில் 900 தியேட்டர்களில் வெளியானது எனவும், தமிழ் சினிமாவில் முதல் நாள் அதிக வசூலாக ரூ.35 கோடி வசூல் செய்தது எனவும் டிவிட்டரில் மூவி டிராக்கர்ஸ் என சிலர் அடித்துவிட்டனர். மேலும், மேலும் 2 நாளிலேயே இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துவிட்டதாகவும், மொத்தமாக இப்படத்தின் வசூல் 200 கோடியை தாண்டியதாகவும் பதிவிட்டனர். இதை அஜித் ரசிகர்கள் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து கொண்டாடினர்.
ஆனால், உண்மையான வசூல் என்ன என்கிற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. வலிமை திரைப்படம் ரூ.115.25 கோடி செலவில் உருவான ஒரு திரைப்படமாகும். இப்படம் 740 தியேட்டர்கள் மட்டுமே வெளியானது. இப்படத்தின் முதல் 5 நாள் வசூல் ரூ.65 கோடி மட்டுமே. முதல் 8 நாளில் ரூ.75 கோடியும், 2 வாரத்தில் மொத்தம் 81 கோடியை மட்டுமே வலிமை படம் வசூலித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக இப்படம் ரூ.90 கோடியையும், இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து இப்படம் ரூ.110 கோடியை மட்டுமே வலிமை படம் வசூல் செய்துள்ளது.
இப்படத்தின் வெளியீட்டு உரிமை, டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை என மொத்தம் ரூ.141 கோடிக்கு இப்படம் விற்பனை செய்யப்பட்டது. எனவே, இப்படம் தயாரிப்பாளருக்கு ரூ. 25 கோடி லாபத்தை கொடுத்துள்ளது.
இப்படத்தின் சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய ஏரியாக்களின் வெளியீட்டு உரிமை ரூ.58 கோடிக்கு வினியோகஸ்தர்கள் வாங்கினர். இதில், அவருக்கு வசூலானது ரூ.50 கோடி மட்டுமே. எனவே அவர்களுக்கு ரூ.8 கோடி நஷ்டம் எனக்கூறப்படுகிறது. அதேநேரம், செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களில் வலிமை திரைப்படம் கொஞ்சம் லாபத்தை கொடுத்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடக உரிமை வாங்கியவர்களுக்கு தலா ரூ. 1 கோடி நஷ்டத்தை இப்படம் கொடுத்துள்ளது.
மொத்தத்தில் தயாரிப்பாளர் போனிகபூருக்கு ரூ.25 கோடி லாபத்தையும், வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையும் வலிமை படம் கொடுத்துள்ளது.
இந்த தகவல்கள் பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.