அனல் தெறிக்கும் அறிமுக காட்சி...கொல மாஸ் இண்டர்வெல்... வலிமை டிவிட்டர் விமர்சனம்...
அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் இன்று அதிகாலை உலகம் முழுவதும் வெளியானது. சென்னையின், பல முக்கிய தியேட்டர்களில் அதிகாலை 5 மணி சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அஜித் ரசிகர்கள் உற்சாகமாக இப்படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.
இதில், அஜித் அறிமுகமாகும் மழை சண்டை காட்சி படு அசத்தலாக இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், அதேபோல், இடைவேளைக்கு முன் வரும் அந்த பஸ் மற்றும் பைக் சேஸிங் காட்டிகளை இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என சிலர் குறிப்பிடும் அளவுக்கு விறுவிறு பக்கா ஆக்ஷனாக இருப்பதாகவும், வலிமை படம் அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்தும் எனவும் பலரும் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
வினோத் பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பைக் ஆக்ஷன் காட்சிகளை இனிமேல் எந்த தமிழ் சினிமாவிலும் எடுக்க முடியாது. அந்த அளவுக்கு அந்த காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. இடைவேளைக்கு முன்பும், பின்புமான சண்டை காட்சிகள் செம அசத்தலாக இருக்கிறது என டிவிட்டர் விமர்சகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், இந்திய திரைப்படங்களில் வலிமை படம் ஒரு சிறந்த ஆக்ஷன் திரில்லர். துவக்கம் முதல் இறுதிவரை அஜித் இப்படத்தை தோளில் தூக்கி சுமந்துள்ளார்.ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருக்கிறது. படம் நல்ல கருத்தையும் பேசுகிறது.
அஜித் நேரிடையாக தனது ரசிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் நிறைய அறிவுரைகளை கூறுகிறார். தாய் மாசம், சகோதர பாசம் ஆகிய செண்டிமெண்ட் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது என பதிவிட்டு வருகின்றனர்.