தல அஜித் மொரட்டு சிங்கிள்... கொரோனாவுக்கு அப்புறம் கதையே மாறி போச்சு...
தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் லவ் ஸ்டோரி கிடையாது. கொரோனோவுக்கு அப்புறம் கதையே மாறிப்போச்சு. அஜித்துக்குத் தோழியாக ஹூமா குரேஷி நடிப்பதாகப் படத்தின் இயக்குனர் எச். வினோத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக படப்பிடிப்பு நடந்து வரும் வலிமை படம் குறித்துப் பல சீக்ரெட்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இயக்குனர் எச்.வினோத். இந்த படத்தில் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோ உள்ளிட்டவை அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெளியீட்டுக்காகத் தல ரசிர்கள் வெறித்தனமாக காத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் இயக்குனர் எச்.வினோத் வலிமை படம் பைக் ரேஸ் படம் இல்லை, படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் அஜித்துக்கும் ஹூமா குரேஷிக்கும் இடையே காதல் காட்சிகள் கிடையாது. அவர்கள் இருவரும் படத்தில் நண்பர்களாகத் தான் வருவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், படத்தில் யோகி பாபு, குக்வித் கோமாளி புகழ், கார்த்திகேயா உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது. வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.