150 கோடி வசூலை நெருங்குகிறதா வலிமை?!...உண்மை நிலவரம் என்ன?....
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் வலிமை. இப்படம் கடந்த 24ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களை ஒரு பைக் கும்பலை வைத்து செய்யும் வில்லனை போலீஸ் அதிகாரி எப்படி தோற்கடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
2 வருடங்களுக்கு பின் அஜித்தின் படம் வெளியாவதால் அவரின் ரசிகர்கள் ஆர்வமுடன் இப்படத்தை பார்த்து வருகின்றனர். படம் ரிலீஸ் ஆவதற்கு 4 நாட்களுக்கு முன்பே இப்படத்திற்கான முன் பதிவு துவங்கியது
தமிழ் சினிமாவில் அதிக திரையரங்குகளில் வெளியான படம் மற்றும் அதிக முன்பதிவு செய்த படம் என்கிற சாதனையை வலிமை படம் பெற்றது. மேலும், முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் இப்படம் பெற்றது. தமிழகத்தில் மட்டும் ரூ.36 கோடியை இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. அதேபோல், உலகம் முழுவதும் இப்படம் முதல் நாளில் 59.48 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. 2ம் நளில் 35.74 கோடி வசூலானதாகவும், நாளில் உலக அளவில் இப்படம் 95.22 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், படம் வெளியாகி 4 நாட்களில் இப்படம் ரூ.150 கோடி வசூலை நெருங்கி விட்டதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இதில் உண்மையில்லை.. இதில் எந்த ஆதாரமும் இல்லை.. உண்மையான வசூல் என்ன என்பது இன்னும் சில நாட்கள் கழித்தே தெரிய வரும். மற்ற படி ரூ.100 கோடி, 150 கோடி வசூல் என்பதெல்லாம் பொய்யான தகவல் மட்டுமே என சொல்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.