அஜித் நடிப்பில் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியன திரைப்படம் வலிமை. இந்தியாவின் மிக பெரிய ஆக்சன் திரைப்படம் என கூறப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் பாதி மட்டுமே அப்படி இருந்தது. இரண்டாம் பாதியில் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகி, ரசிகர்களை கொஞ்சம் நெளிய வைத்துவிட்டது.
அதனால், படத்தின் ரிசல்ட் பாதிக்கப்படுமோ என தயாரிப்பு நிறுவனம் சுதாரித்து, படத்தில் இருந்து 15 நிமிடத்தை கட் செய்து தூக்கிவிட்டனர். அதற்குள் கலவையான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் பரவ தொடங்கிவிட்டன. இருந்தாலும் அஜித் படம் என்பதால் படம் தாக்குப்பிடித்து ஓடுகிறது.
இதனிடையே தினமும் வலிமை அத்தனை கோடி வசூல், இத்தனை கோடி வசூல் என பல தியேட்டர்காரர்கள், விநியோகிஸ்தர்கள் அள்ளி விட்டு வருகின்றனர். இது உண்மை தானா விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாம்.
இதையும் படியுங்களேன் – விஜயகாந்தை இந்த நிலைமைல நான் பார்த்தா உடைஞ்சி போயிருவேன்.! நான் பார்க்கவே மாட்டேன்.!
அதாவது, விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நமக்கு தான் வரும் என எதிர்பார்த்த விநியோகிஸ்தர்கள் சிலருக்கு அந்த படம் வரவில்லையாம். மாறாக வேறு ஒரு விநியோகிஸ்தர்கள் கையில் சிக்கி, இவர்கள் தியேட்டருக்கு வந்துள்ளதாம். அதனால் விஜய் மீது வருத்தத்தில் இருந்த சில விநியோகிஸ்தர்கள் தான்
வலிமை திரைப்படம் அந்த பட வசூலை மிஞ்சிவிட்டது. இந்தபட வசூலை இத்தனை நாளில் முந்திவிட்டது என கூறி வருகின்றனராம். இந்த தகவலும் கோடம்பாக்கத்தில் உலா வருகிறது.
எது எப்படியோ, வலிமை படம் அஜித் படம் என்பதால், கண்டிப்பாக முதல் 10 நாள் தியேட்டர்களர்களுக்கு நல்ல வசூல் கிடைத்திருக்கும். அதில் அவர்கள் கணிசமான லாபம் பார்த்துவிடுவர். அதனை தாண்டி பெரிய லாபம் கிடைப்பது கடினம் என்றே கூறப்படுகிறது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…