More
Categories: Cinema News Entertainment News latest news

மும்மொழிகளில் அஜித்தின் வலிமை… தேதியை உறுதி செய்த போனி கபூர்!

ரசிகர்களின் இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது அஜித்தின் வலிமை திரைப்படம். தமிழில் ட்ரைலர் வெளியாகி பல மில்லியனை கடந்து கொண்டிருக்கும் நிலையில், நாளை ஹிந்தியில் வெளியாகவுள்ளது வலிமை ட்ரைலர்.

போனி கபூர் தயாரிப்பில், அஜித் மீண்டும் இயக்குனர் வினோத்துடன் கைகோர்த்திருக்கும் திரைப்படம் தான் வலிமை. இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கின்றனர். ஓமிக்ரான் பரவல் காரணமாக திரைப்படத்தின் ரீலீஸ் தேதி மீண்டும் தள்ளி சென்று விடுமோ என அச்சத்தில் உள்ள ரசிகர்களின் மனங்களில் ஐஸ் கட்டியை வைத்துள்ளார் போனி கபூர்.

Advertising
Advertising

தயாரிப்பாளர் போனி கபூர் தன் ட்விட்டர் பக்கத்தில் Experience the POWER OF valimai in Tamil, Telugu and Hindi என பகிர்ந்துள்ளார். அதாவது, மும்மொழிகளில் அஜித்தின் வலிமையை அனுபவிக்கவும் எனவும் உலகளவில் வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் 13 ஆம் திரையிடப்படவுள்ளதாகவும் உறுதி செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ட்விட்டரை தெறித்து வருகின்றனர்.

 

Published by
sam

Recent Posts