முன்பே வெளியாகும் வலிமை! - பக்கா பிளான் போட்ட போனிகபூர்

வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படம் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. எனவே இப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜனவரி 12ம் தேதி இப்படத்தை வெளியிட போனிகபூர் திட்டமிட்டுள்ளாராம். 12ம் தேதி ரிலீஸ் செய்தால் எப்படியும் அன்றும் அடுத்த நாள் 13ம் தேதியும் அஜித் ரசிகர்கள் இப்படத்தை பார்த்து விடுவார்கள்.
அதன்பின் 14ம் தேதி முதல் 17ம் தேதி பொங்கல் விடுமுறை என்பதால் 4 நாட்கள் மற்ற சினிமா ரசிகர்கள் குடும்பத்துடன் இப்படத்தை காண வருவார்கள். எனவே, மொத்தம் 6 நாட்கள் நல்ல வசூலை எட்டலாம் என கணக்கு போட்டுள்ளாராம். அவர் கணக்கும் சரிதான்.
ஏனெனில், இப்படம் ஒன்றரை வருடங்களுக்கு மேல் படப்பிடிப்பில் இருந்ததால் ஒரு தயாரிப்பாளராக அவருக்கு சில கோடிகள் நஷ்டம் அடைந்திருக்க வாய்ப்புண்டு. அதனால்தான் தனது அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பையும் அஜித் அவருக்கே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எதிர்பார்த்த தேதியை விட 2 நாட்களுக்கு முன்பே இப்படம் வெளியாவது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.