ஓடிடியில் வெளியாகும் வலிமை!....போனிகபூருடன் தொடங்கியது பஞ்சாயத்து....
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு துவங்கி இப்படம் பல தடைகளை தாண்டி இப்போதுதான் வெளி வருகிறது. இப்படத்தை போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் மயிர் கூச்செரியும் அதிரடி சண்டை மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் மற்றும் புரமோ வீடியோக்கள் வெளியாகி தாறுமாறாக ஹிட் அடித்து இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஒருபக்கம் இப்படத்தின் ஆன்லைன் முன்பதிவு ஜரூராக நடைபெற்று வருகிறது. வலிமை திரைப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
எனவே, இப்படத்தின் மூலம் பெரிய லாபத்தை பார்த்துவிட வேண்டும் என வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் கணக்கு போடுகின்றனர். அதேநேரம், வலிமை அப்டம் வெளியாகி 2 வாரத்தில் இப்படத்தை ஓடிடியில் விற்பனை செய்ய இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டிருப்பதாக தியேட்டர் அதிபர்கள் நம்புகிறார்கள். எனவே, வசூலில் அதிக ஷேர் வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், படம் வெளியாகி 3 வாரம் கழித்தே ஓடிடியில் வெளியிட போனிகபூர் திட்டமிட்டுள்ளார் எனத்தெரிகிறது.
மாஸ்டருக்கும் இப்படித்தான் நடந்தது. படம் வெளியாகி இரண்டு வாரத்தில் அப்படத்தை ஓடிடியில் கொடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர். எனவே, அதை தடுக்க வேண்டும் என கணக்கு போடுகிறார்கள்..
போனிகபூர் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..