Categories: latest news

எங்கப்பா அந்த சிங்கப்பூர் மாமா வலிமை ரிவியூ.?! ஏக்கத்தில் ரசிகர்கள்.! பின்னணியில் இதுதான்.!

வழக்கமாக ஒரு தமிழ் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகிறது என்றல் அதற்கு முந்தைய நாள் வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகிவிடும். அதாவது நம்ம ஊரில் விடியும் முன்னரே மற்ற நாடுகளில் அந்த தேதி வந்து விடும் என்பதால், அந்த ஊரில் முதல் காட்சி வெளியாகிவிடும்.

உடனே அங்கிருந்த ரசிகர்கள் முதல் ஷோ பார்த்துவிடுவது வழக்கம். அங்கிருந்து முதல் விமர்சனம் வெளியாகும். உடனே அதனை மற்ற சில ரசிகர்கள் அந்த நாட்டிலிருந்து எங்கள் மாமா பார்த்துவிட்டார். படம்  சூப்பர் என பார்க்காமலேயே விமர்சனம் எழுதிவிடுவர்.

இதையும் படியுங்களேன் – சர்கார் கதை திருட்டு.! முருகதாஸ் வீட்டிற்கு வந்து கெஞ்சினார்.! பொது மேடையில் உளறிய பாக்கியராஜ்.!

ஆனால், வலிமையில் அந்த கதை கிடையாதாம். அணைத்து நாடுகளுக்கும் நாளை காலை 4 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படுவதற்கு அந்த தளம் திறக்கப்படுகிறதாம். அதனால், இந்த முறை வெளிநாட்டு ரசிகர்களும், நம் நாட்டு ரசிகர்களும் ஒரே நேரத்தில் வலிமையை கொண்டாட உள்ளனர்.

வலிமை திரைப்படம் இதுவரை இல்லாத அஜித் திரைப்பட அளவுக்கு படம் அதிக தியேட்டர் எண்ணிக்கையில் படம் ரிலீசாக உள்ளது.

Published by
Manikandan