வலிமை பொங்கலுக்கு ரீலிஸ்... அஜித்துடன் மோதப்போகும் விஜய்!

by பிரஜன் |   ( Updated:2021-09-22 06:21:50  )
valimai-4
X

பொங்கல் களத்தில் மோதும் வலிமை - பீஸ்ட்:

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் பாலிவுட் நடிகையான ஹூமாகுரோஷி மற்றும் ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் அப்டேட்டிற்காக அஜித் ரசிகர்கள் மிகப்பெரும் ஆவலில் காத்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் படம் வெளியாகுமா ஆகாதா என பெரும் மன கவலைக்கு உள்ளாகிவிட்டனர் அஜித் ரசிகர்கள். இதனை விஜய் ரசிகர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ட்ரோல் செய்துத்தள்ளினர். இந்நிலையில் சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில் செம அப்டேட் கொடுத்து ரசிகர்களை ஹேப்பி செய்துள்ளது வலிமை படக்குழு.

beast

beast

ஆம், வலிமை படம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியிடப்படும் என்று போனி கபூர் அறிவித்துள்ளார். இதற்கிடையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விஜய்யின் பீஸ்ட் படமும் அதே பொங்கலுக்கு வெளியாகி வலிமையுடன் மோதும் என கூறப்படுகிறது. ஆக இந்த பொங்கல் தல தளபதி பொங்கல். கொண்டாட்டத்தை சேர்ந்து கொண்டாடுங்கப்பா...

Next Story