Connect with us
valimai

Cinema News

சித் ஸ்ரீராமின் உருக்கும் குரலில் வலிமை பட பாடல் புரமோ வீடியோ…

வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படம் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. எனவே இப்படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, படத்தின் புரமோஷன் வேலைகள் தற்போது துவங்கியுள்ளது.

valimai

இந்நிலையில், இப்படத்தில் ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடல் இடம் பெற்றுள்ளது. அந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நான் பார்த்த முதல் முகம் நீ. நான் கேட்ட முதல் குரல் நீ என அப்பாடல் துவங்குகிறது. இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீத் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் வருகிற 5ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது.

valimai

இந்நிலையில், இப்பாடலின் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாடல் துவங்குவதற்கு முன் ‘நான் பார்த்த முதல் முகம் நீ. நான் கேட்ட முதல் குரல் நீ’ என்கிற வரியை நடிகர் அஜித் பேசுவது அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இப்படத்தில் இடம் பெற்ற ‘நாங்க வேற மாறி’ பாடல் வெளியானது. இப்பாடலையும் விக்னேஷ் சிவனே எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top