தல ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாராக இருங்கள்.. விரைவில் அடுத்த பாடல்..!!

by ராம் சுதன் |
valimai
X

தல அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியையடுத்து 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தையும் போனி கபூர்தான் தயாரித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாங்க வேற மாறி' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

valimai

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலை விரைவில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தாமரை வரிகள் எழுதியுள்ள இந்தப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித்துக்கு, சித் ஸ்ரீராம் பாடிய 'கண்ணான கண்ணே' பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்திருந்த நிலையில் தற்போது இந்தப்பாடல் மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் விரைவில் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை முடித்துவிட்டு இதே கூட்டணி மீண்டும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story