அந்த பைக் 18 லட்சம்.! பதறிய அஜித்.! ஷூட்டிங்கில் நடந்தது இதுதான்.!
அஜித்குமார் ஹீரோவாக நடித்துள்ள வலிமை படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, அச்யுந்த் குமார், யோகி பாபு, ராஜ் அய்யப்பா, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை H.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
அஜித் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை பொங்கல் ரிலீஸில் தள்ளி சென்றுவிட்டது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அண்மையில், போனி கபூர் வெளியிட்டுள்ள வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவில்,ஷூட்டிங் போது அஜித் பைக் ஸ்டண்ட் செய்யும் பொழுது யாரும் எதிர்பாராத விதமாக அஜித் பைக்கில் இருந்து கிழே விழுந்தார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் ஆனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டாலும், அவரது கவலை 18 லட்சம் பைக்கைப் பற்றியதாம்.
இந்நிலையில், நாளைய படப்பிடிப்பிற்கு புதிய பைக் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து இயக்குனர் எச்.வினோத்திடம் எடுத்துரைத்தார். ஆனால், பின்னர் அஜித் தனிப்பட்ட முறையில் ஒருவரை அழைத்து புதிய பைக்கை அதே மாடல், அதே நிறம் கொண்டு வந்து படப்பிடிப்பை தொடங்கினார்.