வலிமை படப்பிடிப்பில் தல அஜித்.. வெளிவராத புகைப்படங்கள்....

by சிவா |   ( Updated:2021-10-31 03:27:21  )
valimai
X

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் வினோத். தற்போது மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கியுள்ளார். குற்றங்களை செய்யும் கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதலே இப்படமாகும்.இப்படம் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.

இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது. அங்கு சில பைக் சேஸ் காட்சிகள் எடுக்கப்பட்டது. நடிகர் அஜித் மற்றும் அப்படத்தின் வில்லன் கார்த்திகேயா ஆகியோர் பைக் ஓட்டும் காட்சிகள் அங்கு படம்பிடிக்கப்பட்டது.

valimai

படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பி அஜித் மட்டும் அங்கேயே தங்கியிருந்த சில ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக் பயணம் செய்துவிட்டு பின்னர் திரும்பினார். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியானது.

valimai

இந்நிலையில், வலிமை படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகை வைரலாகி வருகிறது.

valimai

Next Story