நாளை வெளியாகிறதா வலிமை டீசர்?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

by ராம் சுதன் |
valimai
X

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகற்காக இருக்கும் நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியையடுத்து 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தையும் போனி கபூர்தான் தயாரித்து வருகிறார். இதில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாங்க வேற மாறி' மற்றும் அம்மா பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

valimai

அதுமட்டுமின்றி சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் விதமாக அமைந்தது. இதையடுத்து இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

Next Story