Connect with us
saravana store

வலிமை படத்தின் தரமான வீடியோ ரிலீஸ்…அஜித் ரசிகர்கள் ரெடியா இருங்க!..

valimai

Cinema News

வலிமை படத்தின் தரமான வீடியோ ரிலீஸ்…அஜித் ரசிகர்கள் ரெடியா இருங்க!..

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வலிமை. விஸ்வாசம் படத்திற்கு பின் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

valimai

இப்படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. மேலும், இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெறது. அதில், பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் தங்களுக்கு இந்த காட்சியை பார்த்தவுடன் கண்ணீர் வந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் தீம்’இசை வீடியோ இன்று மாலை 3.30 மணிக்கு வெளியாகவுள்ளது. அஜித் – யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ஏற்கனவே பல தீம் இசைகள் ஹிட் அடித்துள்ளது. பில்லா, மங்காத்தா ஆகிய படங்களில் அஜித்துக்கு யுவன் அமைத்த தீம் மியூசிக் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. எனவே, விசில் தீம்க்கும் பலத்த் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Continue Reading
To Top