அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சி...இன்னைக்கு செம ட்ரீட்....
போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை.. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் இருவரும் இணைந்தனர். வலிமை படம் மூலம் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.
இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. எனவே இப்படம் ஜனவரி 12 அல்லது 13ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, படத்தின் புரமோஷன் வேலைகள் தற்போது துவங்கியுள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்ற ‘நாங்க வேற மாறி’ பாடல் வெளியானது. இப்பாடலையும் விக்னேஷ் சிவனே எழுதியிருந்தார். அதேபோல், சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் இடம் பெற்ற அம்மா செண்டிமெண்ட் பாடலான ‘நான் பார்த்த முதல் முகம் நீ. நான் கேட்ட முதல் குரல் நீ ’ வெளியானது. இந்த பாடலையும் விக்னேஷ் சிவனே எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் இப்பாடலை எழுதியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற 3வது பாடல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #ValimaiThirdSingl என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
வலிமை படம் தொடர்பான எல்லா அப்டேட்டையும் முன்னறிவிப்பின்றி வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.