அஜித் ஃபேன்ஸ் ரெடியா இருங்க!..இன்னைக்கி சாயந்திரம் இருக்கு சம்பவம்.....
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் காலா படத்தில் நடித்த ஹுமா குரோஷி முக்கிய வேடத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் பல பைக் சேஸிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இப்படம் வெளியாக இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில், படத்தின் புரமோஷன்கள் துவங்கியுள்ளது. இப்படம் தொடர்பான புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அஜித் தொடர்பான சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வலிமை டிரெய்லர் வீடியோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரே தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.எனவே, இதை கொண்டாட அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.