Categories: latest news trailers

தெறி மாஸ்…கொல மாஸ்… அட்டகாசமான வலிமை டிரெய்லர் வீடியோ

அஜித் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் காலா படத்தில் நடித்த ஹுமா குரோஷி முக்கிய வேடத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படம் ஆக்‌ஷன் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் கலந்த கலவையாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் பல பைக் சேஸிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இப்படம் வெளியாக இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில், படத்தின் புரமோஷன்கள் துவங்கியுள்ளது. இப்படம் தொடர்பான புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அஜித் தொடர்பான சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் ஒரு வருடத்திற்கும் மேல் எதிர்பார்த்த இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், பல பைக் ரேஸ் காட்சிகளும், ஆக்‌ஷன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதைப்பார்க்கும் போது அஜித் ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக தல பொங்கலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Published by
சிவா