சிம்பு நடித்த மாஸ் ஹிட் பாடலை எழுதிய அந்த இயக்குனர்... யாருடன் உட்கார்ந்து எழுதினார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் சில ஹிட் நடிகர்களுக்கு மற்ற நடிகர்களோ இயக்குனர்களோ பாடல் எழுதி வருவது தொடர்கதை தான். இதில் சிம்பு நடிப்பில் வெளியான அம்மாடி ஆத்தாடி பாடலை எழுதிய இயக்குனர் யார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு நடிப்பில் உருவான படம் வல்லவன். இப்படத்தில் நடிகை நயன்தாரா, ரீமாசென் மற்றும் சந்தியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். சிம்பு இயக்கிய இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். எல்லா பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அம்மாடி ஆத்தாடி வேறு லெவல் ரீச் பெற்றது.
இந்த பாடலை டி.ராஜேந்தர் பாடினார் என்பது அனைவருக்கு தெரிந்த சேதி தான். ஆனால் இந்த பாடலை விஜயின் வெற்றி இயக்குனரான பேரரசு எழுதினார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது. வல்லவன் பட ஷூட்டிங் நேரத்தில் பேரரசுக்கு கால் செய்த சிம்பு, தனக்கு ஒரு பாட்டு எழுதுக்கொடுக்க வேண்டும் எனக் கேட்டு இருக்கிறார். ஆனால் அப்போது திருப்பதி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இதனால் தன்னால் முடியாது என சொல்ல நினைத்த பேரரசு சிம்பு அப்பா தான் பாடுகிறார் எனக் கூறியதும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். அப்பாடலின் டியூனை கேட்டுக்கொண்டு வந்த பேரரசு, திருப்பதி படத்தின் இடைவேளையில் உட்கார்ந்து தான் அந்த பாட்டை எழுதி முடித்தார் என சமீபத்திய பேட்டியில் இயக்குனர் பேரரசு தெரிவித்து இருக்கிறார்.