1993 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரியா ராமன், வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வள்ளி”. இத்திரைப்படத்தை கே.நட்ராஜ் இயக்கியிருந்தார். ரஜினி ஆர்ட்ஸ் சார்பாக ரஜினிகாந்த் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
சூப்பர் ஹிட் பாடல்கள்
“வள்ளி” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “என்னுள்ளே என்னுள்ளே” பாடல் காலம் தாண்டியும் ரசிக்கப்படும் பாடலாக அமைந்தது. இப்போதும் கூட அப்பாடல் தமிழ் ரசிகர்கள் அதிகம் கேட்கக்கூடிய டாப் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது.
இளையராஜா
1976 ஆம் ஆண்டு வெளிவந்த “அன்னக்கிளி” திரைப்படத்தில்தான் இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பதை பலரும் அறிவர். அன்றில் இருந்து இன்று வரை அவரது இசை ராஜ்ஜியம்தான் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
அது மட்டுமல்லாது, சமீபத்தில் ராஜ்ய சபாவின் நியமன எம்.பி. ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் இளையராஜா. பண்ணைபுரத்தில் இருந்து கிளம்பிய அவரது கால்கள், பாராளுமன்றத்தின் படிகளையே ஏறியிருக்கிறது. இந்த வளர்ச்சி மிகவும் அசுரத்தனமான வளர்ச்சி ஆகும்.
கார்த்திக் ராஜா
இளையராஜாவின் மகனான கார்த்திக் ராஜா ரஜினி நடித்த “பாண்டியன்” திரைப்படத்தின் “பாண்டியனின் ராஜ்ஜியத்தில்” என்ற பாடலை இசையமைத்திருந்தார். இப்பாடல்தான் கார்த்திக் ராஜா இசையமைத்த முதல் பாடல்.
இதையும் படிங்க: சரத்குமாருக்காக ரஜினி சொன்ன அட்டகாசமான கதை… படமா வந்திருந்தா தாறுமாறா இருந்திருக்கும்…
அதனை தொடர்ந்து “உல்லாசம்”, “நாம் இருவர் நமக்கு இருவர்”, “காதலா காதலா” போன்ற பல ஹிட் ஆல்பம்களை கொடுத்திருக்கிறார். தற்போது மிஷ்கின் இயக்கி வரும் “பிசாசு 2’ திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இளையராஜாவா? கார்த்திக் ராஜா?
கடந்த 2019 ஆம் ஆண்டு “இளையராஜா 75” நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், “வள்ளி படத்திற்கு கார்த்திக் ராஜாதான் இசையமைத்தார்” என கூறினார். இதனை தொடர்ந்து இணையத்தில் இது குறித்து விவாதங்கள் எழுந்தன. ஒரு சாரார் “ரஜினி தவறாக கூறுகிறார்” என கூற மற்றொரு சாரார் “ரஜினிகாந்துதான் வள்ளி படத்தின் தயாரிப்பாளர். அவருக்ககு தெரியாததா?’ என எதிர்வாதம் வைத்தனர். இது ஒரு நீண்ட குழப்பமான விஷயமாக இத்தனை நாட்கள் திகழ்ந்து வந்தது.
முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் “வள்ளி திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த குழப்பம் தீரவே தீராது என நான் நினைக்கிறேன்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் நட்ராஜிடம் நான் பல முறை இது குறித்து கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் வள்ளி படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்தார் என்பதாகத்தான் என்னிடம் கூறினார். அதை தாண்டி வேறு யார் சொல்வதை சரி என்று எடுத்துக்கொள்ள முடியும்” என கூறியுள்ளார்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…