வெளிநாடுகளில் வலிமை இழந்துவிட்டாரா அஜித்.! காரணம் இதுதானா.?!
அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் நாளை மறுநாள் உலகமெங்கும் கோலாகலமாக வெளியாக உள்ளது. இதனை வரவேற்க ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். திரையரங்கு முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என நாம் இணையத்தில் பார்த்து வருகிறோம்.
ஆனால், வெளிநாடுகளில் நிலைமையே வேறாம். அதாவது , வலிமை திரைப்படம் வியாழன் வெளியாகிறதாம். வழக்கமாக புதிய திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகும். துபாய் போன்ற அரபு நாடுகளில் வெள்ளி விடுமுறை மற்ற நாடுகளிலும் அடுத்தடுத்த நாட்கள் வெள்ளி, சனி ஞாயிறு என தியேட்டரில் கூட்டம் வந்துவிடுமாம்.
இதையும் படியுங்களேன் - தெறி அப்டேட்.! சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக சியான் விக்ரம்.! இத யாருமே எதிர்பார்க்கல.!
ஆனால், தற்போது அரபு நாடுகளில் கூட பெரும்பாலான இடங்களில் சனி, ஞாயிறு தான் விடுமுறை என ஆகிவிட்டதாம். அதானல் வியாழன் வெளியாகும் வலிமை படத்திற்கு வியாழன் வெள்ளி கிழமை எதிர்பார்த்ததை விட குறைவான எண்ணிக்கையில் தான் முன்பதிவு நடைபெறுகிறதாம்.
சனி , ஞாயிறுகளில் வழக்கம் போல கூட்டம் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு சாதகமான விமர்சனங்கள் வந்தால், வெள்ளிக்கிழமை கூட புக்கிங் படு ஜோராக இருக்கும் என கூறப்படுகிறது.