Categories: Cinema News latest news

ஒரு வேளை டைட்டில்ல பிரச்சினையா இருக்குமோ! மறுபடியும் ‘வணங்கான்’ படத்தில் ஏற்பட்ட குளறுபடி

வணங்கான் திரைப்படம் பாலாவின் இயக்கத்தில் இப்போது அருண் விஜய் நடிப்பில் தயாராகிக் கொண்டு வருகின்றது. முதலில் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிகை கீர்த்தி செட்டி ஆகியோர் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் சில பல கருத்து வேறுபாடுகள் காரணமாக சூர்யா இந்தப் படத்தில் இருந்து விலகினார்.

முதலில் இந்தப் படத்தை சூர்யாவின் 2d நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதால் தயாரிப்பு பணியில் இருந்தும் விலகிக் கொண்டார். சிறிது நாட்கள் படப்பிடிப்பிற்கு சென்ற சூர்யா அதற்கான தயாரிப்பு செலவான 10 கோடி ரூபாயை அந்த படத்தில் செலவிட்டார்.

இதையும் படிங்க : வசூலை அள்ளும் ஜெயிலர்!.. முதல் ஆளாக நெல்சனுக்கு வலை விரித்த அந்த நடிகர்!…

அதன் பிறகு அருண் விஜய் இந்த படத்தில் இணைந்தார் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் இந்த படத்தில் நடிக்கிறார். 2d நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகிய பிறகு வணங்கான் திரைப்படத்தின் மொத்த தயாரிப்பு பணியையும் பாலாவே மேற்கொள்வதாக இருந்தது. இன்று வரை அவர் தான் தயாரிப்பு பணியில் இருந்தார்.

ஆனால் திடீரென்று தயாரிப்பு பணியை வேறு ஒருவருக்கு கைமாறி விட்டிருக்கிறார் பாலா. மாநாடு திரைப்படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தான் இப்போது வணங்கான் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறாராம்.

இதையும் படிங்க : தொடர் மாஸ் ஹிட் படங்களுக்கு தயாராகும் உச்ச நட்சத்திரங்கள்.. சூர்யா போடும் மாஸ்டர் ப்ளான்!..

அவர்தான் இந்த வணங்கான் திரைப்படத்தை தயாரிக்கப் போகிறார் என்று தெரிந்ததிலிருந்து வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றதாம்.

Published by
Rohini