‘வானத்தை போல’ பட இயக்குனருக்கு வந்த சோதனை!.. அடாவடியில் இறங்கிய கும்பல்.. ஹீரோவிடம் தஞ்சம் புகுந்த சம்பவம்..
ஒரு காலத்தில் குடும்பங்கள் கொண்டாடும் சினிமாவாக தமிழ் சினிமா இருந்து வந்தது. குடும்ப உறவினர்களுக்கிடையே இருக்கும் அண்ணன் தம்பி பாசம், தந்தை மகன் பாசம், தாய் மகன் பாசம் என பாசத்திற்கு அடிமையாக இருந்தனர் ரசிகர்கள். அந்த அளவுக்கு அவர்களின் ரசனைக்கு ஏற்ப ஏராளமான படங்கள் வெளிவந்தன.
ஆனால் இன்றைய காலகட்ட சினிமா மொத்தமாக மாறிவிட்டது. சீரியல் என்று சொல்லி ஏளனமாக பார்க்க கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது நம் குடும்ப உறவுகள். அப்படி பட்ட ஒரு படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியிலும் ஒட்டு மொத்த தமிழக மக்கள் மத்தியிலும் சக்கப் போடு போட்டது.
விஜயகாந்த் நடிப்பில் அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ‘வானத்தைப் போல’ திரைப்படம். இந்த படத்தை விக்ரமன் இயக்க ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். விஜயகாந்திற்கு ஜோடியாக மீனா, பிரபுதேவா, கௌசல்யா, லிவிங்க்ஸ்டன் உட்பட பல நடிகர்கள் நடித்து வெளியான படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.
இதே படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து ‘எஜமானா’ என்ற பெயரில் ராதாபாரதி இயக்கியிருந்தார். இவர் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த படமான ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற படத்தை இயக்கியவர். இதில் பிரசாந்தை அறிமுகம் செய்தவரும் இந்த இயக்குனர் தான். கன்னடத்தில் ரீமேக் செய்து வானத்தை போல படத்தை வெளியிட தமிழை விட கன்னட மொழியில் 300 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.
இதையும் படிங்க: உட்கார சேர் தராமல் அசிங்கப்படுத்திய விவேக்… பிளான் பண்ணி பழிவாங்கிய மூத்த பத்திரிக்கையாளர்… இப்படி எல்லாம் நடந்திருக்கா??
இதில் லீடு ரோலில் நடித்தவர் மறைந்த கன்னட நடிகரான விஷ்ணு வர்தன். அந்த சமயம் கன்னட சினிமா கம்மியான பட்ஜெட் உள்ள படங்களையே தயாரித்து வந்தது. மேலும் அதன் சினிமா தரமும் அந்த சமயம் குறைந்து வந்தது. அதனால் மற்ற மொழி சினிமா படங்கள் இங்கு வந்து ராஜ்ஜியம் செய்வதை ரசிகர்கள் உட்பட கன்னட சினிமாவே விரும்பவில்லை..
அந்த நேரத்தில் தான் வானத்தை போல படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்து வெளியிட்டிருந்தனர். அந்த வெற்றி விழாவின் போது ராதா பாரதிக்கு எந்த ஒரு மரியாதையும் செய்யவில்லையாம். இதை பார்த்த விஷ்ணு வர்தன் விழா கமிட்டியிடம் கூறி அதன் பிறகே ராதாபாரதியை மேடைக்கு வரவழைத்து மரியாதை செய்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : ஒரு பொறுப்புள்ள இயக்குனர் இப்படி பண்ணலாமா?… மிஷ்கினை விளாசி தள்ளிய பிரபல தயாரிப்பாளர்…
இது முடிந்து அங்கு ஒரு ஹோட்டலில் ராதாபாரதி தங்கியிருந்தாராம். அப்போது சில கும்பல் ஹோட்டலுக்குள் புகுந்து ராதாபாரதியை அடாவடியாக அடித்து எங்க இருந்து எங்க படம் பண்ண வர என்று கேட்டு அடித்திருக்கின்றனராம். உடனே ராதாபாரதி விஷ்ணு வர்தனுக்கு போன் செய்ய அவர் சில ஆள்களை அனுப்பி ராதாபாரதியை காப்பாற்றியிருக்கிறார். இப்படி பல பிரச்சினைகளை இன்றளவும் வேற்று மொழி சினிமாக்களுக்கிடையே நாம் பார்க்க முடிகிறது. இந்த சுவாரஸ்ய தகவலை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.