Categories: Cinema News latest news

இதெல்லாம்மா கிஃப்ட் கொடுப்பீங்க?.. DD-க்கு வாணி போஜன் கொடுத்த பரிசு! என்னனு பாருங்க

நடிகையும் தொகுப்பாளினியுமான டிடி திவ்யதர்ஷினியின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டி.வி.யில் பிரபல தொகுப்பாளியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. டிடி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இவரின் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை.

இவர் ஏற்கனவே பா. பாண்டி, காஃபி வித் காதல் போன்ற படங்களில் நடித்துள்ள டிடி, தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க படத்திலும் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “வாணிம்மா உனக்கு இந்த பிளவுஸ் அழகாக இருக்கிறது”. என கூறினேன். உடனே உனக்கு இது பிடித்துள்ளதா? உனக்கு இதை அனுப்புகிறேன்” என வாணி போஜன் கூறினார். இப்போது அந்த பிளவுஸ் என் வீட்டில் உள்ளது. நன்றி வாணிம்மா” என பிளவுஸை டிடி பதிவிட்டுள்ளார்.


சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகிய தெய்வ மகள் சீரியலில் சத்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வாணி போஜன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக மாறினார். பின்னர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு தொடரிலும் வாணி போஜன் நடித்திருந்தார்.

பின்னர் ஓ மை கடவுளே படத்தில் மீரா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக பிரபலமானார். பின்னர் லாக் அப், மலேஷியா டூ அம்னீஷியா, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மகான், மிரள் ஆகிய படங்களில் வாணி போஜன் நடித்துள்ளார்.



வெப் தொடர்களிலும் வாணி போஜன் நடித்துள்ளார். ட்ரிபிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ், செங்கலம் ஆகிய தொடர்களிலும் வாணி போஜன் நடித்துள்ளார்.

தற்போது விக்ரம் பிரபு உடன் பாயும் ஒளி நீ எனக்கு, சசிகுமார் உடன் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, லவ், ரேக்ளா ஆகிய படங்களில் வாணி போஜன் நடித்து வருகிறார்.

Published by
muthu