16 வயசுலயே அதெல்லாம் முடிஞ்சது.. ரெம்ப ஓப்பனாக உண்மையை உளறிய விக்ரம் பட நாயகி.!

by Manikandan |
vani bhojan
X

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகை வாணி போஜன் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான மகான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த காட்சிகள் படத்தில் வரவில்லை என்றாலும் கூட, நீக்க பட்ட காட்சியாக வெளியானது.

காட்சியை பார்த்த அனைவரும் மகான் படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகளை வைத்திருக்கலாமே என்று கூறினார்கள். இதனை தொடர்ந்து தற்போது வாணிபோஜன் அருண் விஜய்க்கு ஜோடியாக தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

vani bojan

இந்த நிலையில், தமிழ் ராக்கர்ஸ் ப்ரோமோஷனுக்காக நடிகை வாணிபோஜன் சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. முக்கியமாக உங்களின் முதல் பிரேக் அப் எப்போது என்று தொகுப்பாளர் கேட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்- இணையத்தை அதிர வைத்த இறப்பு செய்தி.. யார் அந்த கௌஷிக்… வருத்தத்தில் தென்னிந்திய சினிமா.!

vani bhojan

அதற்கு பதில் அளித்த வாணிபோஜன் தனக்கு 16 வயது இருக்கும்போதே காதல் வந்துவிட்டதாகவும், அப்போதே பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது 16 வயது அந்த வயதில் பல காதல் கடிதங்கள் வரும் எனவே பிரேக் அப் ஆனதால் அதைப்பற்றி பெரிதாக கவலைபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பிறகு தொகுப்பாளர் முதல் முத்தம் எப்போது என்று கேட்க, அதற்கும் நடிகை வாணிபோஜன் மிகவும் அசால்ட்டாக பதில் அளித்துள்ளார். " முதல் முத்தமும் 16 வயதில் கொடுத்துவிட்டதாக ஓப்பனாக தெரிவித்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இதையெல்லாம் இப்படியா வெளிப்படையாக சொல்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Next Story