அதுல மட்டும் நடிச்சிருந்தால் லேடி சூப்பர் ஸ்டாரே நீங்கதான்...கௌதம் மேனன் படத்தை மிஸ் பண்ண வருத்தத்தில் வாணிபோஜன்...

by Rohini |
vani_main_cine
X

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை வாணிபோஜன். ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் வாணிபோஜன்.

vani1_cine

சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பரீட்சையமானார். அந்த ஒரு சீரியல் மூலமே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார். அந்த சீரியலுக்கு பிறகு தான் வெள்ளித்திரைக்கு பயணத்தை ஆரம்பித்தார்.

இதையும் படிங்கள் : நீ இப்படி இருந்தால் தான் ரெம்ப அழகா இருக்க… ஓப்பனாக கமெண்ட் அடித்த தனுஷ்.! வெளியான சீக்ரெட்…

vani2_cine

ஓ மை கடவுளே படத்தின் வெற்றி அடுத்தடுத்த பல படங்களின் வாய்ப்புக்கு அடிகோலியது. கிடைத்த ரோல்களை நல்ல படியாக பயன் படுத்திக் கொண்ட வாணிபோஜன் சமீபத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் அருண்விஜயுடன் தன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் சின்னத்திரைக்கு முன் அவர் மாடலாக இருந்திருக்கிறார்.

vani3_cine

இதையும் படிங்கள் : தப்பு கணக்கு போட்டு மாட்டிக் கொண்ட நடிகர் விஷால்…! கடைசியில் கோர்ட் வைத்த செக்…

அதன் மூலம் சின்னத்திரைக்கு முன்னரே பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அப்படி வந்த படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா படமும் ஒன்று என கூறினார். ஆனால் எந்த ரோல் என்று தெரியாது. ஆனால் கௌதம் மேனன் சாரை பார்த்தால் கேட்க வேண்டும் என்று கூறினார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷா மற்றும் சமந்தா இருவரும் நடித்திருந்தனர். இந்த இருவர் கதாபாத்திரத்தில் எது நடித்திருந்தாலும் இன்று வாணிபோஜன் தான் டாப் ஹீரோயினாக இருந்திருப்பார் என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.

Next Story