ஸ்வீல்ஸ் டிரஸ்லில் சுண்டி இழுக்கும் வாணிபோஜன்..!

சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகா்களால் செல்லமாக அழைக்கபடும் வாணிபோஜன் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கியவா். அதன் மூலம் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வைப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகமாகி பின்னர் ஜெயா டிவியில் மாயா தொடரிலும் நடித்தாா்.
ஆனால் என்னவோ அவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலத்திய சீரியல் என்றால் அது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய தெய்வமகள் சீரியல் தான்.
பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. அசோக் செல்வனுடன் இணைந்து ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்து பெருமளவில் பிரபலமாகினார்.
லாக்கப், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஜெய் நடித்த டிரிபிள்ஸ் என்கிற வெப் சீரியஸில் நடித்தார். மேலும், சூர்யா தயாரிப்பில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார்.
திறமையாக நடிக்கும் இவர் சரியான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். ஒருபக்கம், சினிமா வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் செய்யும் அதே யுக்தியை கடைபிடிக்க துவங்கியுள்ளார்.
அதாவது, வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். சில சமயம் சற்று கவர்ச்சியாகவும் அவர் உடை அணிந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.
வாணி போஜன் தனது இன்டாகிராம் பக்கத்தில் ஆன்லைன் நிறுவனம் ஒன்றை விளம்பரப்படுத்தும் விதமாக இந்த கோடைகாலத்தில் ஸ்கீன் கேர்பற்றிய விளம்பரத்தில் அழகாக ஸ்வீல்ஸ் உடையணிந்து போஸ் கொடுத்துள்ளாா். அதை பார்த்து நெட்டிசன்கள் such a wonderful டிரெஸ் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனா்.