சத்தியமா திருந்தவே மாட்டீங்கடா டேய்… வயசான அம்மாவை கூட விடமாட்றாங்க – வாணி போஜன் காட்டம்!

Published on: June 21, 2023
vani bojan
---Advertisement---

மாடல் அழகியான வாணி போஜன் விளம்பர படங்களில் நடித்து பின்னர் சீரியல் நடிகையானார். இவர் நடித்த தெய்வமகள் தொடர் மிகப்பெரிய அளவில் மக்களை கவர்ந்தது. அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஒரு இரவு, அதிகாரம் 79, ஓ மை கடவுளே, லாக் அப் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.

தற்போது விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் நடித்து உள்ளார். தொடர்ந்து விதார்த்துடன் ஒரு படம், அதர்வாவுடன் ஒரு படம், வெப் சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆண்கள் குறித்து பேசிய அவர்,

நான் காரில் செல்லும்போது அவ்வழியாக பைக்கில் செல்லும் வயதாக அம்மாக்களின் சேலை சற்று விலகினால் கூட அதை பின்னால் வரும் 10 ஆண்கள் பார்க்கிறார்கள். இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் சத்தியமா திருந்தவே மாட்டாங்க என காட்டமாக கூறினார்.