Categories: Entertainment News

உன்னோட வெட்கம் பேரழகு!. ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த வாணிபோஜன்!..

பொதுவாக சில நடிகைகள் சீரியலில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வருவார்கள். ஆனால், சினிமாவில் அறிமுகமாகி சரியான வாய்ப்பில்லாமல் சீரியலுக்கு சென்றவர் வாணிபோஜன்.

ஊட்டியில் பிறந்து வளர்ந்து அங்கேயே கல்லூரி படிப்பையும் முடித்தார். மாடலிங் துறையில் ஆர்வம் வந்ததால் முதலில் துணிக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்தார்.

அப்படியே ஓர் இரவு என்கிற பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தது. அதன்பின் ஆஹா மற்றும் மாயா ஆகிய சீரியலில் நடித்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பி லட்சுமி வந்தாச்சி என்கிற சீரியலில் நடித்தார்.

அதன்பின் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, மிரள், பாயும் ஒளி நீ எனக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தற்போது மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், புடவை அணிந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

அந்த வகையில் கருப்பு நிற புடவையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Published by
சிவா