வனிதா பொண்ணு முதல் 2வது மனைவியை விட்டு வந்த பப்லு வரை.. யாரெல்லாம் பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளை மாலை 6:00 மணிக்கு தொடங்குகிறது. ஏழாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதே அரைச்ச மாவு பிக்பாஸ் இந்த முறையும் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இரண்டு வீடு என்கிற புது கான்செப்டை கொண்டு வந்துள்ளனர். மேலும் போட்டியாளர்கள் பலர் பிரபலங்களாக உள்ள நிலையில், நிச்சயம் இந்த சீசன் சூடு பிடிக்கும் என தெரிகிறது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் சூட்டிங் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்துள்ளன. பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதையும் படிங்க: இசை வெளியீட்டு விழாவில் மேடை ஏற விரும்பாத லோகேஷ்! ‘லியோ’வில் பொதிந்து கிடக்கும் முடிச்சுகளை அவிழ்த்த பிரபலம்

ஆனால், 18 வயதான தனது மகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக அனுப்பப் போகிறார் என்பது உறுதி ஆகியுள்ளது. 19 வயதான மௌனராகம் 2 சீரியல் மூலம் பிரபலமான ரவீனா தாஹா மற்றொரு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார் என்கிற உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சமீபத்தில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகர் பப்லு தனது ஆசை மனைவியை விட்டுவிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் வர முடிவு செய்துவிட்டார். அவரை தொடர்ந்து சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினாரா அல்லது பிக் பாஸுக்கு போவதற்காக வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்கினாரா என தெரியவில்லை நடிகர் கூல் சுரேஷும் வெந்து தணிந்தது காடு இனிமே பிக் பாஸ் வீட்டுக்கு வணக்கத்தை போடு என உள்ளே நுழைந்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ‘இறைவன்’ படத்தில் யுவன் செஞ்ச வேலை! ‘தளபதி68’க்கே ஆப்பா அமைஞ்சிடும் போலயே!..

மேலும் பிக்பாஸ் அமீரின் உறவினரான ஐஷு, பாடகர் யுகேந்திரன், பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன் உள்ளிட்ட போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் மட்டுமின்றி விசித்ரா, பாரதி கண்ணம்மா வினுஷா, தாராள குடோன் தர்ஷா குப்தா, காமெடி நடிகர் பாலசரவணன், மேலும் சில மாடல் நடிகைகள் என இந்த முறை மொத்தம் 20 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருப்பதாக கூறுகின்றனர்.

Related Articles
Next Story
Share it