பீட்டரை நான் கல்யாணமே பண்ணிக்கல!.. எனக்கு அவர் புருஷனும் இல்ல!.. கடுப்பான வனிதா விஜயகுமார்…

by சிவா |   ( Updated:2023-05-02 09:51:37  )
vanitha
X

vanitha

தமிழில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். அவரின் மகள் வனிதா. சில திரைப்படங்களிலும் நடித்தார். குடும்பத்தை எதிர்த்து ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்துவிட்டார். அதனின் ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு 2 மகள்களும் பிறந்தனர். அதன்பின் அவரையும் பிரிந்தார்.

Vanitha
Vanitha

2 வருடங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. பீட்டர் பால் ஏற்கனவே திருமணமான நிலையில் வனிதா சர்ச்சையில் சிக்கினார். சமூகவலைத்தளங்களில் அவரை பலரும் கடுமையாக விமர்சித்தனர். சில மாதங்கள் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர். அதன்பின் பீட்டர் பாலின் குடிப்பழக்கம் பிடிக்காமல் அவரிடமிருந்தும் விலகினார்.

அதன்பின் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, யுடியூப்பில் சமையல் வீடியோ வெளியிடுவது மற்றும் சினிமாவில் நடிப்பது என பிசியாகி விட்டார். 2 நாட்களுக்கு முன்பு பீட்டர் பால் இறந்துவிட்டார். ஊடகங்கள் அனைத்தும் வனிதா விஜயகுமாரின் கணவர் இறந்துவிட்டார் என செய்திகள் வெளியிட்டது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வனிதா ‘இதுபற்றி பதில் அளிக்கலாமா வேண்டாமா என யோசித்து கொண்டிருந்தேன். இப்போது வேறு வழியில்லை. நான் பீட்டர் பாலை சட்டரீதியாக திருமணம் செய்துகொள்ளவில்லை. நானும் அவரும் 2020ம் வருடம் சில மாதங்கள் ஒன்றாக இருந்தோம். அந்த உறவு அந்த வருடத்தோடு முடிந்துவிட்டது.

நான் அவரின் மனைவியும் அல்ல. அவர் என் கணவரும் அல்ல. எனவே, என் கணவர் இறந்துவிட்டார் என செய்திகளை போட வேண்டாம் என ஊடங்களையும், செய்தியாளர்களையும் கேட்டு கொள்கிறேன். நான் சட்டப்படி சிங்கிளாகத்தான் வாழ்கிறேன். எனக்கு எந்த கணவரும் இல்லை. இதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. தற்போது நான் எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். இது என் தாழ்மையான வேண்டுகோள்’ என பதிவிட்டுள்ளார்.

Next Story